வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரு வாய் சோறு போட மாட்டாரா அஜித்.? எம்ஜிஆருடன் ஒப்பிட்டுப் பேசிய பிரபலம்

அஜித்துக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது ரசிகர் கூட்டத்தை கலைத்து விட்டார். அதுமட்டுமின்றி ரசிகர்கள் தன்னுடைய படத்தை மட்டும் வந்து பார்த்தால் போதும் என கூறியிருந்தார்.

ஏனென்றால் அவரவர்களுக்கு வேலை இருக்கு, அதை விட்டுவிட்டு ஒரு நடிகரின் ரசிகர் என்பதால் வீணாக நேரத்தை செலவிடக்கூடாது என்பதே அவரது நிலைப்பாடு. சமீபத்தில் என்னை அல்டிமேட் ஸ்டார், தல என்றோ அழைக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

Also Read :அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய், ஆக்ஷனுக்கு லீவு விடும் இளைய தளபதி

ஆனால் அவரது ரசிகர்கள் அஜித்தை விடுவதாக இல்லை. அஜித் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொள்கிறது. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்ட போது கூட ரசிகர்கள் அஜித்தை பார்த்து ஆர்ப்பரித்தனர்.

இவ்வாறு அஜித் மீது வெறியாக இருக்கும் ரசிகர்களுக்கு அவர் ஒன்றுமே செய்ததில்லை என தயாரிப்பாளர் கே ராஜன் விலாசி உள்ளார். இவர் திரைத்துறையை சார்ந்த நடிகர்கள், நடிகைகள் போன்றோர்களை தற்போது வெளிப்படையாக கடுமையாக பேசி பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

Also Read :பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்ட விக்னேஷ் சிவன்.. ஏகே 62-க்கு வந்த சோதனை

அந்த வகையில் அஜித், தான் வாங்கும் கோடிகளில் சில லட்சங்களை செலவு செய்து ரசிகர்களுக்கு ஒரு வாய் சோறு போடலாம். ஆனால் அதை செய்ய மாட்டார். எம்ஜிஆர் தன் தொண்டர்களுக்காக விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதனால் தான் அவர் இறந்தும் வாழ்கிறார்.

ஆனால் இவர்கள் இருந்தும் வாழாமல் உள்ளனர் என அஜித்தை கே ராஜன் ஒரு பேட்டியில் விமர்சித்திருந்தார். சினிமா என்பது மற்ற தொழில்கள் போலவே இது ஒரு பொழுதுபோக்கு அம்சம் கொண்டது என்பதை அஜித் உணர்ந்து செயல்படுகிறார். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் கே ராஜன் கடுமையாக விமர்சித்தது அஜித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read :10 முறை நேருக்கு நேராக மோதிக்கொண்ட அஜித், விஜய் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?

Trending News