புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரஜினி உருட்டிய உருட்டுக்கு விஜய் எவ்வளவோ பரவாயில்லை.. காக்காவோ, பருந்தோ முதல்ல மனுஷனா இரு!

Rajini Vs Vijay: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் அரசியல் பயணம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அது மட்டுமல்ல அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் 72 வயதிலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் ரஜினி திட்ட வட்டமாக இருக்கிறார்.

அதனால் தான் ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது காகம், பருந்து கதையை சொல்லி பெரும் பரபரப்பு கிளப்பினார். ஆனால் பிரபல யூட்யூப்பர் ஒருவர் ரஜினி உருட்டிய உருட்டுக்கு விஜய் எவ்வளவோ பரவாயில்லை காக்காவோ, பருந்தோ முதல்ல மனுஷனா இரு! என்று ரஜினியை பகிரங்கமாக சாடி உள்ளார்.

Also Read: ஜெயிலர் ஜெயிச்சா இதெல்லாம் தான் காரணம்.. விஜய்யை பெருமையாக பேசி சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்தும் பிரபலம்

ரஜினி ஒவ்வொரு முறையும் நான் ஒரு குதிரை மாதிரி, யானை மாதிரி இப்போது கழுகு மாதிரி என கதை கட்டி விட்டிருக்கிறார். ஆனால் யானையோ குதிரையோ கழுதையோ அதெல்லாம் முக்கியமில்லை முதலில் மனுஷனாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் எல்லாம் மனுஷனாக பிறந்தவர்கள். ஆகையால் மனுஷனாக இருக்க வேண்டும்.

விஜய்யை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் மனுஷனாக இருக்கிறார். ஏனென்றால் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அந்த மக்களுக்கு ஆதரவாக இரவோடு இரவாக போய் நின்றார். அந்தப் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் அளித்தார். அதேபோலத்தான் நீட் தேர்வினால் இறந்து போன அனிதாவின் குடும்பத்தையும் பார்த்து ஆறுதல் சொன்னார்.

Also Read: இந்த 3 படங்களின் மொத்த கலவைதான் ஜெயிலர்.. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தட்டி தூக்கிய நெட்டிசன்கள்

மேலும் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது அவர்களுடன் சேர்ந்து நின்றார், அவர் மனிதராக இருக்கிறார். அதனால் தான் விஜய் குருதியகம், விஜய் விழியகம், விஜய் படிப்பகம் என்று ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்.

இதை அவர் அரசியல் நோக்கத்திற்காக செய்கிறார் என சொன்னாலும், இதன் மூலம் மக்கள் பயன் அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் தன்னுடைய ரசிகர்களை அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி குத்தி விட்டு வேடிக்கை பார்க்கவில்லை. இந்த வேலையை ரஜினி தான் செய்தார். நான் அரசியலுக்கு வருவது உறுதி, நான் போர் வரும்போது சொல்கிறேன் என பல மேடைகளில் தன்னுடைய ரசிகர்களை உசுப்பேற்றி வைத்திருந்தார்.

Also Read: ஜெயிலர் பட வசூலை தடுக்க போடும் ஸ்கெட்ச்.. உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா, கேளுங்க தளபதி

ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்தார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன், நான் செய்வதை தான் சொல்வேன் சொல்வதை தான் செய்வேன் என உருட்டு உருட்டுன்னு உருட்டியவர் தான் ரஜினி. ஆனால் விஜய் அப்படி கிடையாது, அரசியலுக்கு விஜய் வருகிறார் என அவருடைய அப்பா சொன்னபோது, ‘நான் இப்போது அரசியலுக்கு வரவில்லை. வரும்போது சொல்கிறேன். படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறேன்’ என்று வெளிப்படையாக பேசினார்.

அதிலும் 234 தொகுதிகளிலும் பள்ளிக்கு செல்ல முடியாத ஏழை எளிய மாணவ மாணவிகளுக்காக பயிலகத்தையும் திறந்து இருக்கிறார். இதை பலரும் அரசியல் நோக்கத்திற்காக தான் செய்கிறார் என விமர்சிக்கின்றனர். இருப்பினும் அவர் நோக்கத்தை விட அவர் செய்வது சிறப்பான செயலாக இருக்கிறது என்று விஜய்யை தூக்கி வைத்து, ரஜினியை கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார் பிரபல யூட்யூபரான சாட்டை துரைமுருகன்.

Trending News