சனிக்கிழமை, மார்ச் 1, 2025

துணை நடிகையிடம் அத்துமீறல்.. வள்ளியின் வேலன் சீரியலில் இருந்து தூக்கப்பட்ட பிரபலம்!

Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வள்ளியின் வேலன் சீரியலில் இருந்து பிரபலம் ஒருவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

ஸ்ரேயா அஞ்சன், சித்து, ஸ்ரீதர் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் வள்ளியின் வேலன் சீரியல் ஜீ தமிழில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அப்பாவின் அன்புக்காக பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கும் பணக்கார பெண். அந்தப் பெண்ணுக்கு அன்பும், ஆதரவுமாக இருக்கும் வீட்டு வேலைக்காரன், பின்னர் அவர்களுக்குள் நடக்கும் காதல் இதுதான் இந்த சீரியலின் கதை.

சீரியலில் இருந்து தூக்கப்பட்ட பிரபலம்!

ஸ்ரேயா மற்றும் சித்து ஏற்கனவே கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஒன்றாக நடித்த பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடி ஒன்றாக சேர்ந்து நடிக்கும் சீரியல் என்பதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சீரியலின் இயக்குனர் பிரதாப் மணி முதற்கட்ட நடிகர்களை தாண்டி துணை நடிகர்கள் நடிகைகளிடம் ரொம்பவே கடுமையாக நடந்து வந்திருக்கிறார்.

ஒருமையில் பேசுவது, கண்டபடி திட்டுவது என இருந்திருக்கிறார். இந்த விஷயம் சேனல் நிர்வாகத்திடம் போக, பிரதாப் மணியை மாற்ற முடிவெடுத்து இருக்கிறார்கள்.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலின் இயக்குனர் மாற்றப்பட்டால் அதன் பின்னர் கதை நகர்வு என்பது கொஞ்சம் பின்னடைவை சந்திக்கும். இந்த சீரியல் எப்படி போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News