Leo : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். கதையின் நாயகனாக விஜய்யும் அவருக்கு ஜோடியாக திரிஷாவும் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இயக்குனர்களே பல பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
அதாவது மிஷ்கின், கௌதம் மேனன் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் வில்லன்களாக நடித்து வருகிறார்கள். மேலும் அர்ஜூன், மடோனா செபஸ்டின், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் லியோ படத்தில் இடம்பெறுகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் தினமும் ஒவ்வொரு பிரபலங்களின் பெயர் லியோ படத்தில் இடம்பெறுவதாக வந்து கொண்டிருக்கிறது.
Also Read : லியோவில் அர்ஜுனால் ஏற்பட்ட குழப்பம்.. பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மாட்டிக்கொண்டு முழித்த லோகேஷ்
நேற்றைய தினம் இணையத்தையே அல்லோலபடுத்திய செய்திதான் லியோ படத்தில் தனுஷிடம் பெறுகிறார் என்ற தகவல். ஏற்கனவே விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இப்போது லியோவில் தனுஷா என ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
மேலும் இயக்குனர் அனுராக் காஷ்யப் லியோ படத்தில் நடிப்பது உறுதி ஆகி இருந்தது. இவ்வாறு லியோ படத்தின் லிஸ்ட் பெருசாகி கொண்டே போகும் நிலையில் இதை விமர்சிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதாவது போண்டாமணி மற்றும் போனி கபூர் மட்டும் தான் லியோ படத்தில் நடிக்காதது மிச்சம்.
Also Read : விஜய்க்கு ஜோடி த்ரிஷா இல்லையா.? புரியாத புதிராக லியோ படத்தை மெருகேற்றும் லோகேஷ்
ஒருவேளை லோகேஷ் இவர்களை மறந்துவிட்டாரோ என்பது போல் பதிவிட்டிருக்கிறார். அவர் சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் குறைந்த நாட்களிலேயே லியோ படத்தை லோகேஷ் எடுத்து முடிக்க உள்ளார். அதுவும் தளபதி விஜய் போன்ற பெரிய நடிகர் படம் என்றால் அவருக்கான காட்சிகள் தான் அதிகம் இருக்க வேண்டும்.
ஆனால் சினிமாவில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் எல்லோரையும் லியோவில் நடிக்க வைத்தால் விஜய்க்கு என்ன ஸ்கோப் இருக்கும் என்று ரசிகர்கள் கேட்க தொடங்கி விட்டனர். முழுக்க முழுக்க லியோ படத்தை லோகேஷ் படமாக எடுப்பதாக சொல்லிவிட்டு விஜய்யை திரையில் காண்பிப்பாரா என்ற கேள்வியே அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டார்.

Also Read : திரிஷாவை விட அதிக கால்ஷீட் இவருக்கு தானாம்.. லியோவில் பரபரப்பை ஏற்படுத்தும் லோகேஷ்