திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மதில் மேல் பூனையாக இருக்கும் விஜய்.. நம்பி அசிங்கப்பட போகும் தளபதி, அடித்து சொல்லும் பிரபலம்

Actor Vijay: விஜய் இப்போது அரசியலில் இறங்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாக உள்ளது. தனது ரசிகர்களை நம்பி அரசியலில் இறங்கும் விஜய்க்கு தோல்வி தான் நிச்சயம் என வலைப்பேச்சு பிஸ்மி சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவர் பேசி இருக்கும் செய்தி தான் இப்போது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

அதாவது விஜய் அரசியலில் இறங்குவதற்காக படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் திமுகவை எதிர்க்க துணிந்து விட்டார். ஏனென்றால் அவர்கள் தான் இப்போது ஆளுங்கட்சியாக செயல்பட்டு கொண்டிருப்பதால் விஜய்க்கு இவர்கள் தான் முதல் டார்கெட் என்று கூறுகிறார்.

Also Read : லோகேஷ் செதுக்கிய 5 கதாபாத்திரங்கள்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் ரெண்டு கேரக்டர்

மேலும் கட்சிப் பெயரை அறிவித்ததும் அவருக்கு கண்டிப்பாக பிரச்சனை ஆரம்பிக்க இருப்பதாக பிஸ்மி கூறியிருக்கிறார். அதாவது அதன் பிறகு விஜய் நடிக்கும் படங்கள் வெளியாவதில் நிறைய சிக்கல் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட ஆறு கோடிக்கு மேல் மக்கள் இருக்கிறார்கள்.

அதில் விஜய் ரசிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் சில லட்சங்கள் தான் இருப்பார்கள். இவர்களை நம்பி அரசியலில் விஜய் குதித்தால் கண்டிப்பாக தோல்வி தான் வந்து சேரும் என்பதை அடித்து சொல்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி. மேலும் பொது மக்களின் பார்வை கண்டிப்பாக விஜய் மீது விழாது.

Also Read : விஜய்யின் அரசியலுக்கு புதிதாக கிளம்பிய பூகம்பம்.. ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் தளபதி

மேலும் சினிமா பிரபலங்கள் அந்த காலத்தில் அரசியலில் வந்து ஜெயித்தாலும் இப்போது உள்ள காலகட்டம் முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது. அரசியலுக்கு வந்து விஜய் தோல்வியுற்றால் மீண்டும் அவரது சினிமா கேரியர் எப்படி இருக்கும் என்பது கேள்வி குறிதான்.

சினிமாவில் உள்ள அவரது பெயரும் மாறி மார்க்கெட்டும் காலியாக வாய்ப்பிருக்கிறது. இப்போது விஜய்யை பொறுத்தவரையில் மதில் மேல் பூனையாக தான் இருக்கிறார். எந்த பக்கம் போவது என்ற தடுமாற்றத்தில் தான் அவருடைய நிலை இருக்கிறது. ஆனால் ரசிகர்களை நம்பி விஜய் அசிங்கப்பட போவது 100% உறுதி என பிஸ்மி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

Also Read : புகழ் போதையில் விஜய்யின் அப்பாவை மட்டம் தட்டி பேசிய குணசேகரன்.. மண்டையில் ஒரு கொட்டு வைத்து அறிவுரை கூறிய விவாகரத்து நடிகர்

Trending News