வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

யாருக்கும் தெரியாத விவேக்கின் இறப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம்.. கோடி கோடியாய் சம்பாதித்தும் பிரயோஜனம் இல்ல

சின்ன கலைவாணர் விவேக் இன்று வரை தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்து வருகிறார். ஆனால் அவருடைய இறப்பு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ந்து ரசிகர்களை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார்.

திடீர் என ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் உயிரிழந்தார். இந்நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து விவேக்கின் மரணத்திற்கான காரணம் இதுதான் என அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார் போண்டாமணி. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நகைச்சுவை செய்துள்ளனர்.

Also Read : கெட்ட எண்ணத்தோடு தூபம் போட்ட வடிவேலு.. ஒரே வார்த்தையால் வாயை மூட செய்த விவேக்

அதாவது ஆரம்பத்தில் விவேக்-க்கு ஆண் குழந்தை இல்லை என்பதில் வருத்தம் இருந்ததாம். தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகள் விவேக்கிற்கு பிறந்துள்ளனர். அதன் பிறகு கோயில் குளங்கள் போன்றவற்றிற்கு சென்று தான் ஆண் குழந்தை பிறந்ததாம். அந்த குழந்தையை விவேக் பார்த்து பார்த்து வளர்த்து வந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக மகனின் மரணம் அவரை சுக்கு நூறு ஆக்கியது. மேலும் மீண்டும் ஆண் குழந்தை வேண்டும் என்று டெஸ்ட் டியூப் மூலம் முயற்சி செய்தார். ஆனால் அதிலும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் விவேக் இருந்தார்.

Also Read : அஜித்துக்கு சிபாரிசு செய்த விவேக்.. லைஃப் டைம் படமாக ஏகே கொடுத்த பிளாக்பஸ்டர் 

சினிமாவை பொறுத்தவரையில் மன நிம்மதியாக இருந்தால் மட்டுமே படங்களில் நடிக்க முடியும். அதனால் விவேக்கால் இதிலிருந்து மீண்டு வர முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி விவேக் இறந்து விட்டதாக போண்டாமணி கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கோடி கோடியாக சம்பாதித்தாலும் ஆண் வாரிசு இல்லையே என்பது விவேக்கின் பெரிய குறையாக இருந்தது என்று கூறியுள்ளார். பொதுவாக விவேக்கை பொருத்தவரையில் முற்போக்கு சிந்தனை உடையவர். தன்னுடைய படங்களில் கூட பல காட்சிகளில் இதை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அப்துல் கலாம் வழியில் செல்லக்கூடிய விவேக் இவ்வாறு நினைத்தாரா என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

Also Read : குணச்சித்திர கேரக்டரில் நடித்து வெற்றி கண்ட விவேக்கின் 6 படங்கள்.. தனுஷை வெளுத்து வாங்கிய ஏகாம்பரம்

Trending News