வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்க்கு சொம்படித்து ரஜினியை கவிழ்த்து விடும் பிரபலம்.. ஜெயிலர் வெற்றிக்கு சொன்ன மொக்கையான காரணம்

Jailer Movie: இப்போது தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் படம் தான் ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர். டைகர் முத்துவேல் பாண்டியனாக ரசிகர்களை கவர்ந்துள்ள ரஜினியின் ஜெயிலர் படம் 500 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. பண்டிகை போல இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் ஜெயிலர் வெற்றி அனுதாபத்திற்காக கிடைத்தது என பிரபலம் ஒருவர் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். அதாவது கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் ரஜினி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு ஆரம்பித்தது தான் இதற்கு மூல காரணமாக அமைந்தது.

Also Read : ஜெயிலர் சூட்டோடு அலப்பறை பண்ண வரும் தலைவர் 170.. லோகேஷ் மாதிரி பூஜை தேதியுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கும் படக்குழு

இப்போது விஜய்க்கு சொம்படித்து ரஜினியை கவிழ்த்து விடும் படியாக பேசி இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன். அதாவது ரஜினிக்கு இந்த வெற்றி கிடைத்ததற்கான காரணம் விஜய் தான். விஜய் தொடர்ந்து வசூல் ரீதியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் கடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்கள் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

மேலும் விஜய் தான் டாப்பில் இருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. இதை ஒற்றுக்கொள்ள பல பிரபலங்கள் இருக்கும் நிலையில் ரஜினி தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அதற்காகத்தான் விஜய்க்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஜெயிலர் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் காக்கா, பருந்து கதையை கூறினார்.

Also Read : ஜெயிலர் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வாரி இறைத்த 130 கோடி சம்பள லிஸ்ட்.. வர்மனை விட மூன்று மடங்கு அதிகமாக வாங்கிய யோகி பாபு

இப்படி படத்திற்கு ஒரு ஹைப்பை உருவாக்கி தான் ரஜினி ஜெயிலர் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறார். மேலும் ரஜினிக்கு தெரியும் பாட்ஷா, அண்ணாமலை போன்று பல அற்புதமான படங்களை கொடுத்திருக்கிறார். அதேபோன்ற கதை, தரம் ஜெயிலர் படத்தில் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் பதில்.

அப்படி என்றால் படம் எப்படி வசூல் செய்கிறது என்றால் அனுதாபத்தின் காரணமாக விஜய் முன்பு மிகப்பெரிய மூத்த நடிகர் ஆன ரஜினி தோற்றுவிடக்கூடாது என மக்கள் முடிவு செய்ததால் என்று மொக்கையான காரணத்தை வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். அப்படியே மக்கள் முடிவெடுத்து இருந்தாலும் ஒரு நாள், இரண்டு நாள் பார்ப்பார்கள். ஆனால் ஒரு வாரம் கடந்தும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது ஜெயிலர்.

Also Read : ஜெயிலர் பட வர்மனுக்கு சோறு போட்ட தொழில்.. திறமையை கண்டுபிடித்து வாய்ப்பு வழங்கிய வாரிசு நடிகர்

Trending News