திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

குடும்ப மானத்தையே வாங்கிட்டியே.. பெரிய நிகழ்ச்சியால் கூண்டு கிளியான பிரபலம்

நல்ல பெயர் எடுத்து சினிமா வாய்ப்பு வாங்கலாம் என்ற நினைப்போடு தான் அந்த பெரிய நிகழ்ச்சிக்கு பலரும் என்ட்ரி கொடுக்கிறார்கள். ஆனால் இருக்கிற பேரும் கெட்டு டேமேஜ் ஆயிடும்ன்னு பல பேருக்கு தெரிவதில்லை.

சிலர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நெகட்டிவ் பப்ளிசிட்டியாவது கிடைக்குதுன்னு வந்து விடுகிறார்கள். அப்படித்தான் தற்போது ஒளிபரப்பாகி வரும் அந்த நிகழ்ச்சியிலும் ஒரு கும்பல் இருக்கிறத. ஆனால் விஷயம் புரியாமல் மாட்டிக் கொண்ட ஒரு பிரபலமும் இருக்கிறார்.

பெரிய அளவில் பிரபலமில்லாத இவர் இந்த நிகழ்ச்சியை சாக்காக வைத்து பப்ளிசிட்டியை தேட விரும்பினார். ஆனால் கூடா சகவாசம் கேடு விளைவிக்கும் என்பது போல அவருடைய பெயர் நாறிப்போனது தான் மிச்சம். இதனால் நொந்து போன அவர் இப்போது கூண்டுக்கிளியாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறாராம்.

Also read: அந்தரங்க விஷயத்தை அவிழ்த்து விட்டது என்னோட தப்பு தான்.. காதலி கழட்டி விட்டதும் வில்லனுக்கு வந்த ஞானோதயம்

அந்த அளவுக்கு அவருடைய குடும்பம் இப்போது வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நொந்து போயிருக்கிறது. இப்படி குடும்ப மானத்தை வாங்கிட்டியே. இனி நீ சினிமாவுக்கும் போக வேண்டாம் எங்கேயும் போக வேண்டாம் என கூறிவிட்டார்களாம்.

போதாக்குறைக்கு சொந்த பந்தங்கள் கூட வீடு தேடி வந்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி கொண்டிருக்கிறார்களாம். இதனால் அந்த குடும்பத்து வாரிசு இப்போது மனதளவில் சோர்ந்து போய் இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Also read: புயலால் ஏற்பட்ட நெருக்கம்.. 2 நாள் ஹோட்டலில் சிக்கிய ஜோடி

Trending News