புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினியை அசிங்கப்படுத்தய ஜெயிலர் படக்குழு.. காவாலா பாடலால் கொந்தளிக்கும் பிரபலம்

Jailer Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் ஜெயிலர் படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்திலும் ரஜினி நடித்துள்ளார்.

இந்த சூழலில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இந்த பாடலில் தமன்னா குத்தாட்டம் போட்டு கலக்கி இருந்தார். இப்போது யூடியூப், இன்ஸ்டா என எதை பார்த்தாலும் காவாலா பாடலுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை நடனமாடி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : திருமணத்திற்கு முன்பே உறவில் இருந்த ரஜினி பட நடிகை.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

இந்நிலையில் காவலா பாடலில் ரஜினி சில ஸ்டெப்புகள் போட்டிருப்பார். இது ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அதாவது ஜெயிலர் படத்தின் முதல் வீடியோ வெளியானபோது நெல்சன் ரஜினியை மாஸாக காட்டி இருப்பார்.

மேலும் ஜெயிலர் படம் முழுக்க ரஜினியை நெல்சன் இது போன்று தான் கெத்தாக காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் 70 வயது தாண்டிய நிலையில் தமன்னாவுடன் டான்ஸ் ஆட வைத்திருக்கிறார். அதற்கு அந்தப் பாடல் முழுக்க தமன்னா பாடலாகவே எடுத்துவிட்டு ரஜினியை காண்பிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Also Read : ரஜினி பட்ட கஷ்டத்தை கால் தூசி கூட பட்டிருக்க மாட்டாரு.. அவரு சூப்பர் ஸ்டாரா ? கிழித்து தொங்கவிட்ட பிரபலம்

வேண்டுமென்றே ரஜினியை அசிங்கப்படுத்துவது போல இந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் வயதுக்கு உண்டான காட்சிகளை கொடுத்தால் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நெல்சன் இந்த விஷயத்தில் முற்றிலுமாக சொதப்பிவிட்டார் என செய்யாறு பாலு கொந்தளித்துள்ளார்.

மேலும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி காவாலா பாடலில் ரஜினி இடம்பெற மாட்டார் என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறார்கள். படம் வெளியானால் தான் இதன் உண்மை தன்மை என்னவென்று வெளிவரும்.

Also Read : ஒதுங்கிய ரஜினி, இறங்கிய அர்ஜுன்.. 23 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்

Trending News