
Sivakarthikeyan: அமரன் பட விழாவில் தன்னுடைய சம்பளத்தை இதற்கு முன்பு பலரும் பிடுங்கிக் கொண்டதாக சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.
நடிகர் கமலஹாசன் மட்டும் தான் முழு சம்பளத்தை கொடுத்து இருப்பதாகவும் அவர் தலையில் பெரிய ஐஸ் கட்டியாக தூக்கி வைத்தார்.
சிவகார்த்திகேயனிடம் சம்பளத்தை பிடுங்கியது யார் என எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த நேரம் பிரபலம் ஒருவர் மொத்த உண்மையையும் வெளியில் கொண்டு வந்திருக்கிறார்.
செஞ்ச துரோகம் மறந்து போச்சா?
சிவகார்த்திகேயன் தன்னுடன் இருந்த ஆர் டி ராஜாவை பினாமியாக வைத்து தொடர்ந்து படங்கள் தயாரித்திருக்கிறார்.
இதனால் ராஜாவுக்கு கிட்டத்தட்ட 75 கோடி கடன் வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ராஜா உங்களால் தான் இவ்வளவு கடன் வந்தது என பிரச்சனை செய்திருக்கிறார்.
சரி இந்த கடனை நானே அடைத்துக் கொள்கிறேன் என சிவகார்த்திகேயன் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த கடனை அவர் சம்பாதித்த காசில் அடைக்காமல் வேறொரு திட்டம் போட்டு இருக்கிறார்.
அதாவது தன்னுடைய கடனை யார் அடைக்கிறார்களோ அவர்களுக்கு சம்பளம் வாங்காமல் மூன்று படம் நடித்து கொடுப்பது. சிவகார்த்திகேயன் திட்டத்தில் மாட்டியது KJR ராஜா என்பவர்.
சிவகார்த்திகேயனின் 75 கோடி கடனையும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார். அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் அவருக்கு மூன்று படங்கள் சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுக்க வேண்டும்.
ஆனால் சிவா அவருக்கு இரண்டு படங்கள் மட்டுமே நடித்துக் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த தகவலை தற்போது வெளிக்கொண்டு வந்திருப்பது வலைப்பேச்சு சேனல் பிஸ்மி.