Soori: நடிகர் சூரி காமெடியனிலிருந்து ஹீரோவாக தன்னை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஏறக்குறைய மக்கள் இவரை ஹீரோவாகவே ஏற்றுக் கொண்டார்கள்.
ஹீரோவாக வேண்டும் என்று சூரி ஆசைப்படவில்லை. ஆனால் அந்த அந்தஸ்து கிடைத்ததும் அதை தக்க வைத்துக்கொள்ள சில சால்சாப்பு வேலைகளை பார்த்து வருகிறார் போல.
சூரியப் பற்றிய பொதுவாக பொதுவெளிகளில் நெகட்டிவ் விஷயங்கள் என்று எதுவுமே வராது. எந்த பிரபலங்களும் அவரைப் பற்றி நெகட்டிவ்வாக பேச மாட்டார்கள்.
முதல் முதலாக சூரியன் இன்னொரு பக்கத்தை பற்றியும் திறந்து பேசி இருக்கிறார்.
ஆள கூட்டிட்டு வந்து கத்த விடுறீங்க
வலைப்பேச்சு அந்தணர் அதாவது சூரி நடிக்கும் பட விழாக்களுக்கு அவருடைய ஊரிலிருந்து ஆட்களை ஆடியன்ஸ்களாக கூட்டி வருகிறாராம்.
அந்த விழாவில் சூரி பெயரை சொன்னாலே அவர் வந்தவர்களும் பயங்கரமாக கத்துகிறார்களாம். இதனால் என்ன பேசுகிறார்கள் என்றே அந்த அரங்கத்திற்குள் புரியாமல் போய்விடுகிறதாம்.
இதனால் பத்திரிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அந்தணன் குற்றம் சாட்டி இருக்கிறார்.