வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தமிழ் நாடுன்னா பொங்குறீங்க, கேரளான்னா பம்முறீங்க!, அரசியல்ல இதெல்லாம் சகஜமா தளபதி?

Vijay: முதல்வன் பட கிளைமாக்ஸ் சீனில் அர்ஜுன், கடைசியில் என்னையும் அரசியல்வாதி ஆகிட்டீங்களே என்று சொல்வார். அப்படித்தான் இப்போது நடிகர் விஜய்யின் நிலைமையும் ஆகிவிட்டது.

கருத்து சொன்னாலும் பிரச்சனை, சொல்லலைன்னாலும் பிரச்சனை என்ற அளவுக்கு அவரை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படித்தான் சமீபத்தில் பிரபலம் ஒருவர் விஜய்க்கு எதிராக டுவீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்திருக்கும் படம் தான் அலங்கு.

அரசியல்ல இதெல்லாம் சகஜமா தளபதி?

இந்த பட குழு நேற்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய twitter பக்கத்தில் விஜய் இடம் ஒரு கேள்வி கேட்டு தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

நேற்று அண்ணா யுனிவர்சிட்டி வளாகத்தில் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து பல தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். நடிகர் விஜய்யும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

இதை தான் தற்போது ப்ளூ சட்டை மாறன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவின் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கொட்டியிருந்தார்கள்.

இதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் விஜய் தரப்பிலிருந்து இது குறித்து எதுவுமே பேசப்படவில்லை.

ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பதிவில், கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து எந்த கருத்தையும் சொல்லவில்லை.

தங்களுக்கு கேரளத்தில் அதிக ரசிகர்கள் இருப்பதால்.. அடுத்து வரவுள்ள படத்திற்கு பிரச்னை வரக்கூடாது என்பதாலா? என்று பதிவிட்டு இருக்கிறார்.

Trending News