திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

கமல், விஜய் படங்களும் இப்படி தான் எதிர்ப்பு கிளம்பியது.. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வக்காலத்து வாங்கும் பிரபலம்

பாலிவுட்டில் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி உள்ள தி கேரளா ஸ்டோரி படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதாவது இந்து மத பெண்களின் மூளையை சலவை செய்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கேரளாவில் இந்த படத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை விதித்து போராட்டம் நடத்தினர். பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தங்களது கடுமையான எதிர்ப்பை கொடுத்து வந்தனர்.

Also Read : ஹாலிவுட் படத்தையே ஓவர் டேக் செய்த ‘தி கேரளா ஸ்டோரி’.. ஒரே வாரத்தில் மிரண்டு போன பாக்ஸ் ஆபிஸ் வசூல்

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சீமானும் இந்த படத்தை வெளியிடக் கூடாது என வன்மையாக கண்டித்தார். இப்போது தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக ஒரு பிரபலம் பேசி உள்ளார். அரசியல் விஷயங்களை மிகவும் துணிச்சலோடு பேசக்கூடியவர் தான் சவுக்கு சங்கர். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி வெளி ஆவதற்கு முன்பே எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறான விஷயம் என கூறியுள்ளார்.

பொதுவாக ட்ரைலரை வைத்து இந்த படத்தின் கதை இதுதான் என்று எப்படி முடிவு செய்ய முடியும். இதே போல் தான் விஜய்யின் துப்பாக்கி, கமலின் விஸ்வரூபம் படங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் படம் வெளியான பின்பு மக்கள் அதை ஏற்றுக் கொண்டனர். மேலும் இதே போன்ற கதை நடக்கவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது.

Also Read : தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ஒரு வார வசூல் விவரம் எவ்வளவு தெரியுமா.? மிரண்ட பாக்ஸ் ஆபிஸ்

ஏனென்றால் இந்து மக்களின் மூளையை சலைவை செய்து முஸ்லிமாக மாற்றிய கதையை நாம் கேட்டிருக்கிறோம். அப்போது இருவர் செய்யப்பட்டுள்ளதை படத்திற்காக 20000 பேர் என்று எடுத்திருக்கலாம். படத்திற்காக ஒரு விஷயத்தை மிகைப்படுத்தி சொல்வதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் விளாசி உள்ளார். இவர் பேசிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Also Read : கடும் எதிர்ப்பு, வெறுப்புணர்வை தூண்டிய தி கேரளா ஸ்டோரி.. படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

- Advertisement -spot_img

Trending News