ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

கமலின் இழிவான அரசியல், விஜய் ஒரு பொடிசு.. கடுமையாக சாடிய இயக்குனர்

Kamal : அரசியல் ஆசை பலருக்கு இருந்தாலும் பெரும்பாலும் நடிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், சீமான் தற்போது விஜய் என சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் களம் காண்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்கள் மார்க்கெட் இழந்த பின்பு தான் அரசியலுக்கு வருவார்கள்.

ஆனால் இப்போது சினிமாவில் மிகப் பெரிய உயரத்தில் இருக்கும் விஜய் முழுவதுமாக படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு அரசியலில் இறங்க இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடப் போகிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் அரசியலில் விஜய் ஒரு பொடிசு என பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது விஜய் மிக சிறந்த வாழ்க்கையை விட்டுவிட்டு எதிர்காலம் முழுவதும் துன்பத்தை ஆழ்த்தும் படி செயல்களை செய்து வருகிறார்.

கமல் மற்றும் விஜய்யை விமர்சித்த பிரபலம்

அவரது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பார்த்தாலே கட்சியின் நிலை மற்றும் நிர்வாகியின் செயல் எப்படி இருக்கும் என்பது தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இவர் மனதில் அரசியல் ஆசையை தூண்டி விட்டது தான் காரணம்.

எஸ்ஏசியின் பேராசையால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். அரசியலில் விஜய் ஒரு பொடிசு. சீமானாலே ஒன்னும் செய்ய முடியாத நிலையில் விஜய்யால் ஒன்னும் பண்ண முடியாது. அதேபோல் கமலும் ஒரு இழிவான அரசியலை நடத்தி வருவதாக சாடி இருக்கிறார்.

அதாவது கமலின் கட்சி எந்த தொகுதியிலும் 2000 வாக்குகளுக்கு அதிகமாக பெறவில்லை. கமலை போல விஜய்யும் ஒரு செல்லாக்காசாக தான் அரசியலில் இருப்பார். விஜய்யின் அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தாது என திட்டவட்டமாக வேலு பிரபாகரன் கூறியிருக்கிறார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம்

Trending News