திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முரட்டு நடிகரையே பிஆர்ஓ ஆக மாற்றிய லோகேஷ்.. ஓவர் துதி பாடும் கமல் நண்பர்

Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போதைய தமிழ் சினிமா உலகின் சென்சேஷனல் பிரபலம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர் இயக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் லியோ திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த படம் லோகேஷின் LCU வில் வருகிறதா என்பதை பார்க்கத்தான்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் தூக்கி கொண்டாடுவது கூட பெரிதல்ல, ஆனால் பிரபலங்களும் அவருடைய படத்தில் எப்படியாவது ஒரு காட்சியில் நடித்து விட மாட்டோமா என்று ஏங்கி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தன்னுடைய கடைசி திரைப்படம் தரமானதாக இருக்க வேண்டும், அதை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது இவர்கள் இருவரது கூட்டணியும் ஓரளவுக்கு உறுதியும் ஆகி இருக்கிறது.

Also Read:எந்த நடிகர்களிடம் பார்க்காத கமலின் 6 அதிசய குணங்கள்.. 5 வயதில் சம்பளமாக எத கேட்டார் தெரியுமா.?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கி இருக்கும் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு அவருடைய அடுத்த நகர்வு என்ன என்பதுதான் தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய ஹாட் டாபிக்காக இருக்கிறது. மல்டி ஸ்டார் என்னும் கான்செப்ட் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அறிமுகப்படுத்திய லோகேஷ் கிட்டத்தட்ட 10 லிருந்து 15 பிரபலங்கள் வரை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

இதில் முக்கியமான ஒரு பிரபலம் தான் முன்னணி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் . இவர் காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்து பாலிவுட் சென்ற இவர் வாழ்நாளில் ஒரு முறையாவது இயக்குனர் லோகேஷின் இயக்கத்தில் நடித்து விடுங்கள் என்று தன்னுடைய சக கலைஞர்களிடம் லோகேஷ் பற்றி ரொம்பவும் பெருமையாக பேசிக் கொண்டு வருகிறாராம்.

Also Read:பொது இடத்தில் தர்ம அடி வாங்கிய 6 பிரபலங்கள்.. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கமல்

இவர் இப்படி சொல்வதற்கு காரணம் லியோ படப்பிடிப்பில் லோகேஷ் நடந்து கொண்ட விதம் மற்றும் படத்தின் கதைதான். மேலும் லியோவுக்கு முன் லோகேஷ் இயக்கிய அத்தனை படங்களையும் பார்த்த சஞ்சய் தத்துக்கு எல்லாமே ரொம்ப பிடித்துப் போய்விட்டதாம். இதனால் தான் பாலிவுட் சென்ற பிறகும் இவர் லோகேஷின் புராணம் பாடி வருகிறார்.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான சஞ்சய் தத் உலகநாயகன் கமலஹாசனுக்கு மிக நெருங்கிய நண்பர் ஆவார். இவர் இப்படி லோகேஷின் பிஆர்ஓ போல் அவருடைய துதி பாடி வருவதை பார்த்தால் ஒட்டுமொத்த பாலிவுட் நடிகர்களையும் லோகேஷின் படத்தில் நடிக்க வைப்பதற்கு தென்னிந்தியாவிற்கு அழைத்து வந்து விடுவார் போல் தெரிகிறது.

Also Read:போதிதர்மனுக்கு முந்தியே அசம்பாவிதங்களை கணித்த கமலின் 5 படங்கள்.. ஊழலில் கலங்க வைத்த மகாநதி

Trending News