வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோவில் தளபதி சிகரெட் பிடிக்கல.. இது என்னடா புது உருட்டா இருக்கு

Actor Vijay: லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வருகிறது லியோ படம். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த மாதத்துடன் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு லியோ படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் அன்று படக்குழு தரப்பிலிருந்து நான் ரெடி என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் கிட்டத்தட்ட 2000 நடனக் கலைஞர்கள் கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. யூட்யூபில் நான் ரெடி பாடல் வெளியான உடனே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றது.

Also Read : விஜய் மறந்து போன 4 நடிகர்கள்.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் தளபதி வாங்கிய மொக்கை

இந்த பாடலுக்கு எவ்வளவு பாராட்டு கிடைத்ததோ அதே அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியிருந்தது. சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் முதல் பலரும் விஜய்யை கிண்டல் அடித்திருந்தனர். அதாவது சினிமாவில் முக்கிய நடிகர் ஒருவர் சிகரெட் பிடிப்பது மற்றும் போஸ்டர் ஒட்டுவதை வலியுறுத்துவது தவறு என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இதுகுறித்து தற்போது நான் ரெடி பாடலாசிரியர் விஷ்ணு இடவன் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். மாநகரம் படத்திலிருந்து தற்போது வரை யோகேஷ் உடன் தொடர்ந்து பணியாற்றி வருபவர் விஷ்ணு இடவன். துணை இயக்குனர் மற்றும் இவரது படங்களில் பாடல் ஆசிரியராக இருந்து வருகிறார். சமீபத்தில் இளம் பெண் சர்ச்சையில் இவர் சிக்கி இருந்தார்.

Also Read : எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லைன்னு லியோ ரிலீஸ்ல தெரியும்.. மறைமுகமா மிரட்டி உருட்டி பார்க்கும் உதயநிதி

இந்நிலையில் லியோ படத்தில் தளபதி சிகரெட் பிடிக்கவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது லியோ கதாபாத்திரத்திற்கு இந்த குணாதிசயம் தேவைப்படுகிறது. ஆகையால் லியோ கேரக்டர் மட்டுமே புகை பிடிக்கிறது. இதனால் விஜய் சிகரெட் பிடிக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது.

அதுமட்டுமின்றி விஜய் சிகரெட் பிடித்தால் மக்களும் அதை செய்வார்கள் என்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி இருக்கிறார். லியோவாக நடிப்பதே விஜய் தான் அவர் எப்படி சிகரெட் பிடிக்கவில்லை என்று சொல்கிறார், இது என்ன புது உருட்டா இருக்கு என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தளபதியே ஒருமுறை தனது படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெறாது என வாக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : விஜய்க்கு டஃப் கொடுக்கும் அர்ஜுனின் லியோ கெட்டப்.. ட்ரெண்டாகி கொண்டிருக்கும் புகைப்படம்

Trending News