ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஜெயிலர் ஜெயிச்சா இதெல்லாம் தான் காரணம்.. விஜய்யை பெருமையாக பேசி சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்தும் பிரபலம்

Rajini, Vijay: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் விஜய் மற்றும் ரஜினியை ஒப்பிட்டு நிறைய செய்திகள் வெளியாகி வருகிறது. ஒருபுறம் விஜய்க்கு ஆதரவாகவும், மற்றொருபுறம் ரஜினிக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபலம் ஒருவர் விஜய்யை தூக்கி வைத்து பேச வேண்டும் என்பதற்காக ரஜினியை அசிங்கப்படுத்தி பேசி இருக்கிறார். அதுவும் ஜெயிலர் படம் வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என கடுமையாக பேசியிருக்கிறார். அதுவும் ரஜினியின் ஜம்பம் எல்லாம் விஜய்யிடம் பலிக்காது என்று கூறியிருக்கிறார்.

Also Read : இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை.. ஜெயிலர் படத்தால் சூப்பர் ஸ்டாரை தேடி வந்த பெரும் சிக்கல்

அதாவது பிரபல பத்திரிக்கையாளர் ராமானுஜம் தான் தற்போது ரஜினியை விமர்சித்து பேசியிருக்கிறார். ரஜினி 25 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போது அவரை மிஞ்சி அதிக சம்பளம் வாங்கி விட்டார் விஜய். அதுமட்டுமின்றி இப்போது விஜய் 200 கோடி சம்பளம் வாங்கி வருவதால் ரஜினிக்கு பொறாமை ஏற்பட்டு இருக்கிறது.

அதனால்தான் இப்போது சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சனையை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதன் மூலம் ரஜினி குளிர்காய்ந்து வருகிறார். மேலும் ரஜினிக்கு ஒரு படம் ஓட வேண்டும் என்றால் அதில் நிறைய விஷயம் செய்ய வேண்டி இருக்கிறது. ஜெயிலர் பட வெற்றிக்காகவே நெல்சன் பல வேலைகளை செய்து இருக்கிறார்.

Also Read : அய்யய்யோ விட்டுட்டோமே என புலம்பும் ரஜினி.. மொத்த பெயரையும் தட்டி சென்று ஹீரோ!

அதாவது தமன்னாவின் கவர்ச்சி நடனம், பாலிவுட், டோலிவுட் போன்ற சினிமாவிலிருந்து முக்கிய பிரபலங்கள் ஆகியோர் நடித்தால் மட்டுமே ஜெயிலர் படம் வெற்றி பெறும் என்ற நிலை ரஜினிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் விஜய் படத்திற்கு அப்படி எதுவுமே தேவையில்லை. இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் ரஜினி இவ்வாறு செய்து வருகிறார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவதும் ரஜினிக்கு பொறாமை ஏற்படுத்தி இருக்கிறது என ஒரு பேட்டியில் பத்திரிக்கையாளர் ராமானுஜம் கடுமையாக பேசியிருக்கிறார். அப்படி பார்த்தால் லியோ படத்தில் தான் பாலிவுட் முதல் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருப்பதாக ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Also Read : நின்னு விளையாடிய 6 கேரக்டர் ரோல்.. ரஜினி கதாபாத்திர பெயரை படமாக உருவாக்க வாசு போட்ட திட்டம்

Trending News