Actor Vijay: தமிழக அரசியலில் ஒட்டுமொத்த பார்வையும் தளபதி விஜய் மீது தான் சமீப காலமாக இருக்கிறது. விஜய்யும் தன்னுடைய முதல் கட்ட அரசியல் நகர்வாக மாணவர்களின் கல்வியை குறி வைத்து இருக்கிறார். அவருடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும், என்ன செய்யப் போகிறார் என தெரியாமல் அரசியல் கட்சிகளில் இருந்து சினிமா பிரபலங்கள் வரை திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை கொளுத்தி போடும் விதமாக மீடியாக்களும் பல அரசியல் பிரபலங்களிடமும் விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றி தான் கேள்வி கேட்டு வருகிறார்கள். அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். அப்படி ஒரு அரசியல் பிரபலமிடம் விஜய் பற்றி கேட்கும் பொழுது அவர் பயங்கரமாக பொங்கி எழுந்திருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது சுயநினைவின்றி இருக்கிறார். அவருடைய கட்சியை முழுக்க முழுக்க கவனித்துக் கொள்வது அவருடைய குடும்பத்தினர் தான். அதில் முக்கியமான நபர் அவருடைய மனைவி பிரேமலதா. தற்போது பிரேமலதாவிடம் தான் விஜய் பற்றி கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு பதில் அளித்த அவர், விஜய் அரசியலுக்கு வந்தால் கேப்டன் மாதிரி எல்லாம் இருக்க முடியாது. கேப்டன் மாதிரி இருக்க வேண்டும் என்றால் அதற்கு பல பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கொஞ்சம் ஆவேசமாக மிகைப்படுத்தி பேசியிருக்கிறார். உண்மையிலேயே கேப்டன் விஜயகாந்த் மாதிரி ஒரு மனிதர் இருப்பது என்பது கடினமான விஷயம் தான்.
ஆனால் அவரே தனக்கு அரசியல் குருவாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மனதில் வைத்துக் கொண்டு தான் பல உதவிகளை செய்து வந்தார். அப்படி இருக்கும் பொழுது விஜய் ஏன் கேப்டன் போல் இருக்க வேண்டும் என நினைக்கப் போகிறார். அப்படியே நினைத்தாலும் அவரை போல் உதவ வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் அந்த பழக்கமே முதலில் எம்ஜிஆர் இடமிருந்து தான் தொடங்கப்பட்டது.
தற்போதைக்கு தமிழக அரசியலில் கேப்டன் விஜயகாந்தின் கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியவில்லை. அந்த கட்சியை சமீப கால தேர்தலில் போட்டியாக கூட யாரும் நினைக்கவில்லை. அப்படி இருக்கும்பொழுது கேப்டன் இடத்தை விஜய் பிடித்து விடுவாரோ என்ற பயத்தில் பிரேமலதா பேசுகிறார் என சொல்லப்படுகிறது.