Minister Udhayanidhi Stalin: சமீபத்தில் சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தான் கலைஞர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. திரைத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் அஜித், விஜய்யை தவிர நிறைய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் அந்த நிகழ்ச்சி பெருசா யாருடைய கவனமும் பெறவில்லை.
ஏனோ தானோன்னு அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அது மட்டுமல்ல அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்காக வாடகை கூட இன்னும் கொடுக்க வில்லையாம். அந்த நிகழ்ச்சியில் ப்ரோக்ராம் பண்ணிய ஆர்ட்டிஸ்ட் கூட இன்னும் சம்பளம் கொடுக்கல. கலைஞர் நூற்றாண்டு விழா முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாக போகிறது, இருந்தும் இன்னும் பணம் பட்டுவாடா செய்யாமல் டிம்கி கொடுக்கின்றனர்.
மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முழுக்க முழுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்தனர். அவர்களிடம் பணத்தை கேட்டால் கலைஞர் டிவி இன்னும் காசு தரவில்லை என்று சொல்லியிருக்கிறார்களாம். என்னதான் நூற்றாண்டு விழாவை தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்தாலும், இதன் பின்புலத்தில் திமுக இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
Also Read: விஜய்யை பார்த்து CM க்கு ஆசைப்படும் 4 நடிகர்கள்.. காசு பணம் இருந்தா அரசியலுக்கு வந்து விடலாமா என்ன?
கலைஞர் நூற்றாண்டு விழாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறதா?
தற்போதைய தமிழக முதலமைச்சரான முக ஸ்டாலின் தன்னுடைய தந்தைக்காக ஏற்பாடு செய்த நூற்றாண்டு விழாவில் பணம் பட்டுவாடா செய்யாமல் சம்பள பாக்கியெல்லாம் வைத்திருக்கும் விசயம் இப்போது திரையுலகிலும் அரசியல் களத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது திமுக கட்சியின் மீது பட்டிருக்கும் கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல சினிமாவில் ரொம்பவே செல்வாக்கு இருக்கக்கூடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இதைப் பற்றி தெரியுமா என்றே தெரியவில்லை. ஆனால் மொத்த பழியும் கலைஞர் டிவி மீது விழுவதுதான் கொடுமை.
Also Read: விஜய்யுடன் போட்டி போட தயங்கிய உதயநிதி.. வைரலாகும் பதிவு