புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஏடாகூடமான நடிப்பு, பெயரைக் கெடுத்துக்கொண்ட வசீகர நடிகை.. ஒல்லி நடிகருக்கு பயந்து நடந்த திருமணம்

ஹோம்லி லுக்கில் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகை ஒருவர் தன்னுடைய வசீகர முகத்தால் குடும்ப குத்து விளக்காகவே இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். முதல் படத்தில் பிரகாசமான நடிகருடன் இணைந்து நடித்து வெற்றி கொடுத்ததால் அடுத்தடுத்து அந்த நடிகருடனே சேர்ந்து ஜோடி போட்டு நடித்ததால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இவர் மட்டுமல்ல அடுத்தடுத்து நடித்த அழகான நடிகர், முத்து நடிகர், டான்ஸ் நடிகர், சர்ச்சைக்குரிய நடிகர் என அனைவரிடமும் இணைந்து ஓவர் கவர்ச்சி காட்டாமல் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாகவே மாறினார்.

Also Read: ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. 15 நாளில் பிச்சுகிட்டு போன காதல் ஜோடி

அதன் பிறகு ஒரே ஒரு முறை டான்ஸ் நடிகருடன் கவர்ச்சி தூக்கலாக நடித்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். அந்த படத்தில் டான்ஸ் நடிகருடன் நெருக்கமாக போட்ட ஆட்டம் பார்ப்பதற்கு கண் கூசும் வகையில் இருந்தது. அது மட்டுமல்ல ஒல்லி நடிகருடனும் ஏடாகூடமான கதாபாத்திரத்தில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

ஆனால் அந்த படப்பிடிப்பின் போது ஒல்லி நடிகருடன் தொடர்பு ஏற்பட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி வசீகர நடிகை யாருடன் சேர்ந்து நடித்தாலும் அவரை காதலிப்பதாக கிசு கிசுக்கப்பட்டதால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செம க்யூட்டாக இருக்கும் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: கண்டமேனிக்கு காட்டிய கவர்ச்சி.. பலான காட்சிக்கு ரூட் போட்ட இயக்குனர், மோசம் போன நடிகை

பாவம் அவரும் எவ்வளவுதான் விளக்கம் கொடுக்க முடியும். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நடிகருடன் சேர்த்து வைத்து பேசியதால் வேறு வழி இல்லாமல் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகி விட்டார்.

Trending News