தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் மிரட்டுபவர் என்றால் அது கமல் மட்டும் தான். அவருடைய நடிப்பை பறைசாற்றும் வகையில் எத்தனையோ திரைப்படங்கள் இருக்கின்றன. அதில் அவர் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம் இன்று வரை அவருடைய பெருமையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது.
கடந்த 1996 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். சண்முகி மாமி என்ற அந்த கதாபாத்திரம் இப்போது வரை பேசப்பட்டு வருகிறது அந்தப் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் தான் ஆன் அலெக்ஸியா ஆண்ட்ரா.
ஐந்து வயது குழந்தையாக அந்த படத்தில் நடித்த அவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் கமலே அவருடைய நடிப்பை பார்த்து வியந்து பாராட்டி இருக்கிறார். அந்தப் படத்திற்குப் பிறகு அர்ஜுனின் தாயின் மணிக்கொடி என்ற படத்தில் நடித்த அவர் சில விளம்பர படங்கள், ஹிந்தி படங்கள் ஆகியவற்றில் நடித்திருக்கிறார்.
இவ்வாறு தன்னுடைய 13 வயது வரை சினிமாவில் நடித்து வந்த அவர் அதன் பிறகு நடிப்பை விட்டு முற்றிலுமாக விலகி இருக்கிறார். இத்தனைக்கும் அந்த வயதிலேயே அவரை தேடி பல ஹீரோயின் வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அவர் தன்னுடைய படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமாவுக்கு முழுக்கு போட்டு இருக்கிறார்.
Also read: தயாரித்த முதல் படத்திலேயே தோல்வி அடைந்த கமல்.. நஷ்டத்தை ஈடுக்கட்ட 5 வருட போராட்டம்.!
அதன் பிறகு அப்படி ஒரு குழந்தை நட்சத்திரம் இருந்தார் என்பதை பலரும் மறந்து விட்டனர். ஆனால் சமீபத்தில் அவரைப் பற்றி பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது சினிமா வேண்டாம் என்று முடிவு எடுத்த ஆன் அலெக்ஸியா தற்போது பெண் தொழிலதிபராக கலக்கிக் கொண்டிருக்கிறார். பலரும் வேண்டாம் என்று தூக்கிப் போடும் வேஸ்ட் பொருட்களை புதிதாக உருவாக்கும் பிசினஸை தான் இவர் செய்து கொண்டிருக்கிறார்.
இதற்காக அவர் ஏகப்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். தற்போது திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் இவர் தன்னுடைய பிசினஸ் மூலம் பிரபலமாகி வருகிறார். மேலும் அனிகா போன்ற குழந்தை நட்சத்திரங்கள் இப்போது ஹீரோயின் வாய்ப்புகளுக்காக தயாராகி வரும் நிலையில் கிடைத்த வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்துவிட்டு பிசினஸில் கலக்கி வரும் இவரை பலரும் ஆச்சரியத்தோடு தான் பார்த்து வருகின்றனர்.
Also read: கமலின் முதல், 2ம் மனைவியின் தற்போதைய நிலை.. ஆச்சரியமூட்டும் வைரல் புகைப்படங்கள்