பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல் இருக்கும் அந்த நடிகர் நடிக்க வந்த வேகத்திலேயே அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டானார். அதிலும் அவர் நடித்த ஒரு திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதனாலேயே அவருக்கு ஏராளமான வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது.
இதனால் அந்த நடிகருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கர்வம் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. அதன் விளைவாக அவர் தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் தனக்கு படத்தின் லாபத்திலும் பங்கு வேண்டும் என்று முரண்டு பிடித்து இருக்கிறார். இதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால் படம் பற்றிய அவதூறு செய்திகளை இவரே பரப்பி வந்தார்.
Also read: சைக்கோ தயாரிப்பாளரிடம் சிக்கி சின்னாபின்னமான நடிகை.. தாங்க முடியாமல் தப்பித்து வந்த பரிதாபம்
இது எல்லாவற்றிற்கும் மேலாக படத்தை ஓட விட மாட்டேன், வழக்கு தொடர்வேன் என்றெல்லாம் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனாலேயே இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய விரும்பாமல் தலை தெறிக்க ஓடி இருக்கின்றனர். அதன் விளைவாக நடிகருக்கு பட வாய்ப்புகள் முற்றிலும் குறைந்து போனது.
அதன் பிறகு தான் அவர் தன்னுடைய தவறை உணர்ந்து இருக்கிறார். இப்போது அவர் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் நான் அப்படி கிடையாது என்று பாவமன்னிப்பு கேட்காத குறையாக கதறுகிறாராம். ஆனாலும் அவர் பேச்சை நம்பி வாய்ப்பு கொடுக்க தான் யாரும் தயாராக இல்லை.
தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் அந்த நடிகர் எந்த வம்பும் செய்யாமல் சமத்துப் பிள்ளையாக இருக்கிறாராம். இருந்தாலும் இவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சல் தான் இவரை பாடாய் படுத்துகிறது. அவர்களின் சாபத்தினால் தான் இப்போது அந்த அமுல் பேபி நடிகர் முற்றிலும் முடங்கிப் போய் இருக்கிறார்.
Also read: கர்ப்பத்தை காட்டி பணத்தை ஆட்டையை போட்ட நடிகை.. இமேஜை காப்பாற்றிக் கொள்ள திண்டாடிய நடிகர்