வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொழப்பு போயிரும்னு பொத்திகிட்டு இருக்காங்க.! ஒரே படத்தில் வடிவேலுவை வெறுத்த காமெடியன்

வைகைப்புயல் வடிவேலு சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவின் காமெடி உலகில் ஜாம்பவானாக இருந்தார். முன்னணி ஹீரோக்கள் கூட இவருடைய கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கும் அளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தார் வடிவேலு. வடிவேலுவின் காமெடிகளால் மட்டுமே ஓடிய திரைப்படங்களும் உண்டு. ஒரு சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்தார்.

இப்படி சினிமா துறையில் பல வெற்றிகளை சந்தித்து வந்த வடிவேலு, யானை தன் தலையிலேயே மண்ணை வாரிக் போட்டுக் கொள்வது போல் செய்த சில விஷயங்களால் ஒட்டு மொத்த சினிமாவும் இவரை ஒதுக்கி விட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் வடிவேலு எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

Also Read:நகைச்சுவை மட்டுமில்லை பாட்டிலும் பலே கில்லாடி.. வடிவேலு பாடகராக ஜொலித்த 5 பாடல்கள்

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் படவாய்ப்பு கிடைத்தும் வடிவேலு அதை சரியாக பயன்படுத்தாமல் தவறவிட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மலை போல் நம்பி இருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மண்ணை கவ்வியது. தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தான் வடிவேலுவின் கடைசி நம்பிக்கை என்று கூற சொல்லலாம்.

இந்த நிலையில் வடிவேலு தற்போது படங்கள் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே நிறைய சக நடிகர்கள் அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் தன்னுடைய படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் இடமும் அவர் அட்ஜஸ்ட்மென்ட் எதிர்பார்ப்பார் என்று கூட தகவல்கள் தற்போது வெளிவர ஆரம்பித்தன. இது வடிவேலுவின் மீதான நல்ல மதிப்பை ரசிகர்களிடம் குறைத்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:படப்பிடிப்பிலேயே தனுஷை அசிங்கப்படுத்திய வடிவேலு.. ஓவர் ஆட்டத்தால் பறிபோன பட வாய்ப்பு

அந்த வரிசையில் தற்போது காமெடி நடிகர் கொட்டாச்சி வடிவேலுவின் மீது பல குற்றங்களை சொல்லி இருக்கிறார். வடிவேலு பண விஷயத்தில் மோசமானவர் என்றும், அவருடைய கேரக்டரும் சரியில்லை என்றும் சொல்லி இருக்கிறார் காமெடி நடிகர் கொட்டாச்சி. அவருடைய குணம் பிடிக்காததால் ஒரு படத்துடன் வடிவேலுவுடன் நடிப்பதையே நிறுத்திக் கொண்டதாகவும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

கொட்டாச்சி, வடிவேலுவுடன் இணைந்து பிரண்ட்ஸ் திரைப்படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறார். அதுவும் இயக்குனர் சித்திக் கேட்டுக்கொண்டதற்காக அந்த படத்தில் நடித்தாராம். அந்த ஒரு படத்திலேயே வடிவேலுவின் குணத்தை பார்த்து வெறுத்துப் போன அவர் இனி வடிவேலுவுடன் நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டாராம். மேலும் அவருடன் இருப்பவர்களுகம் வடிவேலு குணம் தெரிந்தும் வாய்ப்புக்காக அமைதியாக இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:கெட்ட எண்ணத்தோடு தூபம் போட்ட வடிவேலு.. ஒரே வார்த்தையால் வாயை மூட செய்த விவேக்

 

Trending News