புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Sundar C : கைப்புள்ள கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த காமெடி நடிகர்.. சுந்தர்சியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் எடுத்த முடிவு

சுந்தர் சியின் படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் என்றால் அது பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படம் தான். இந்தப் படத்திற்கு பிளஸ் பாய்ண்டாக அமைந்தது வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரம் தான். இதில் வரும் காமெடிகள் அனைத்துமே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

ஆனால் கைப்புள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விவேக் தானம். ஆரம்பத்தில் வடிவேலு மற்றும் விவேக் இருவரும் ஒன்றாக படங்களில் நடித்து வந்தனர். அப்போது சுந்தர் சி யின் வின்னர் படத்திலும் விவேக் ஒப்பந்தமாகி இருந்தார்.

இதனிடையே சுந்தர் சி மற்றும் விவேக் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் வின்னர் படத்திலிருந்து விலகி விட்டார். விவேக்குக்கு பதிலாக வடிவேலு கைப்புள்ள கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தமானார். அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக சுந்தர் சி மற்றும் விவேக் படம் பண்ணவில்லை.

சுந்தர் சி விவேக் இடையே ஏற்பட்ட பிரச்சனை

இதைத்தொடர்ந்து இருவருக்குள் சமூக உறவு ஏற்பட்ட பிறகு ஒன்றாக படங்களில் நடித்தார்களாம். வீராப்பு படத்தில் ஒரு காமெடி நடிகர் தேவைப்பட்டபோது உடனடியாகவே விவேக்கிடம் கேட்டபோது ஒத்துக்கொண்டு வந்து நடித்துக் கொடுத்தாராம்.

அதன் பிறகு அரண்மனை 3 படத்திலும் விவேக் நடித்திருந்தார். அப்போது ஒரு காட்டில் தான் சூட்டிங் நடந்ததால் நெட்வொர்க் அதிகம் கிடைக்காதாம். இதனால் இரவு நேரங்களில் விவேக் மற்றும் சுந்தர் சி அதிகம் உட்கார்ந்து பேசுவார்களாம்.

மேலும் விவேக் தனது உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்பவர் என்பாதால் வாக்கிங் செல்வாராம். சுந்தர் சிக்கும் உடல்நலம் பற்றிய நிறைய அறிவுரை கூறியுள்ளாராம். மேலும் அரண்மனை 3 டப்பிங் சில மாற்றம் செய்ய வேண்டும் என்ற ஃபோனில் சுந்தர் சி இடம் கூறினாராம்.

ஆனால் அதற்குள் விவேக் மரணித்து விட்டதாக சுந்தர் சி மனம் உடைந்து பேசினார். அதுவும் மனோபாலா, விவேக் போன்ற நடிகர்கள் இல்லாதது தனக்கு கை உடைந்தது போல் இருப்பதாகவும் அந்த பேட்டியில் சுந்தர் சி கூறியிருந்தார்.

Trending News