Vijay-Goat: 2026 தேர்தலை குறி வைத்திருக்கும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள கோட் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் சோசியல் மீடியாவை திணற வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே படத்தின் முதல் பாடல் வெளிவந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாம் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பு தரப்பு கோட் படத்தின் சாட்டிலைட் உரிமை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதன்படி கோட் படத்தை வாங்குவதற்கு நீ நான் என பல போட்டிகள் நடந்தது. அதில் ஜீ தமிழ் நிறுவனம் கிட்டத்தட்ட 98 கோடிகளை கொடுத்து இந்த உரிமையை கைப்பற்றி இருக்கிறது. இதுவரை வெளியான விஜய் படங்களிலேயே இது அதிகபட்ச சாட்டிலைட் உரிமை ஆகும்.
விஜய்யின் கோட் சாட்டிலைட் வியாபாரம்
முன்னதாக லியோ படத்தை சன் டிவி நிறுவனம் 80 கோடிகள் கொடுத்து வாங்கியிருந்தது. அதேபோல் வாரிசு படத்தையும் சன் டிவி 50 கோடிகளை கொடுத்து கைப்பற்றி இருந்தது.
அந்த வகையில் இது அதிகபட்ச வியாபாரம் ஆகும். அதேபோன்று டிஜிட்டல் உரிமையை நெட் பிலிக்ஸ் தளம் கைப்பற்றியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து இதன் வியாபாரம் 125 கோடிகள் ஆகும்.
ஹிந்தி மொழி வியாபாரம் மட்டும் 25 கோடிகளாக உள்ளது. மேலும் படத்தின் பட்ஜெட் 300 கோடியாகும் இதில் ப்ரீ பிசினஸ் வியாபாரமே கிட்டத்தட்ட பட்ஜெட் அளவை எட்டி விட்டது. தற்போது படத்தின் எதிர்பார்ப்பும் உச்சகட்டத்தில் இருப்பதால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் கோட்
- Vijay: கோட் VFX வேலை முடிஞ்சது, வெங்கட் பிரபு ட்விட்
- GOAT பட நடிகர்களின் சேலரி மற்றும் பட்ஜெட்
- GOAT படத்தில் விஜய் நடிக்கலையாம்.. வெங்கட்பிரபுவின் பித்தலாட்டம்