செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

லாஸ்லியாவுக்கும் கவினின் வருங்கால மனைவிக்கும் இப்படி ஒரு தொடர்பா.? சந்தேகத்தை தீர்த்து புகைப்படம்

Monica David – Losliya: நடிகர் கவின் இன்னும் ஒரு வாரத்தில் தன்னுடைய நெருங்கிய தோழியான மோனிகா டேவிட் என்னும் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவருடைய ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், நெட்டிசன்கள் வழக்கம் போல் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் யார் என தங்களுடைய தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.

முதலில் அந்தப் பெண்ணின் பெயர் மோனிகா டேவிட் என்றும், தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அவருடைய புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்நிலையில் கவினின் வருங்கால மனைவிக்கும், அவருடைய முன்னாள் காதலிக்கும் இருக்கும் தொடர்பை பற்றி தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read:கழட்டிவிட்ட லாஸ்லியா, அதிரடி முடிவெடுத்த டாடா கவின்.. பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் வாழ்க்கையே முடிவு செய்யுமாம்

நடிகர் கவின் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட போது தன்னுடைய சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்து வந்தார். லாஸ்லியாவும் கவின் மீது விருப்பமாக இருந்தார். ஆனால் அதை இவர்கள் இருவரும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை. எதுவாக இருந்தாலும் வெளியில் சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு இவர்கள் இருவருடைய ரசிகர்களும் ரொம்பவும் எதிர்பார்த்தது இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் என்று தான். ஆனால் ஒரு பக்கம் கவின் அடுத்தடுத்து படங்கள் என பிசியாக இருந்த நிலையில், லாஸ்லியாவும் சினிமாவில் வெற்றி பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எங்கள் இருவருக்கும் செட்டாகவில்லை, நாங்கள் பிரிந்து விட்டோம் என லாஸ்லியா ஒரு பேட்டியில் சொல்லி இந்த காதல் கதைக்கு முடிவு கட்டினார்.

Also Read:கோடிகளில் சம்பளத்தை உயர்த்திய டாடா பட கவின்.. மனசாட்சி இல்லையா என வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்

இந்த நிலையில் கவின் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிவிட்டது. அவர் திருமணம் செய்து கொள்ள போகும் மோனிகா, நடிகை லாஸ்லியாவின் நெருங்கிய தோழி என சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி கொண்டு இருக்கிறது. மேலும் இந்த மோனிகா லாஸ்லியாவுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்து இருக்கிறார். இவர் கவின் மற்றும் லாஸ்லியா இருவரின் பொதுவான தோழி என சொல்லப்படுகிறது.

                                         இணையத்தில் வைரலாகும் லாஸ்லியா – மோனிகா புகைப்படம்

kavin gf
kavin gf

முதலில் நல்ல தோழிகளாக இருந்த இவர்கள், அதன்பின்னர் சமூக வலைத்தளங்களில் கூட ஒருவரை ஒருவர் அன் ஃபாலோ செய்து விட்டார்களாம். இதற்கு காரணம் கவின் தான் என சொல்லப்படுகிறது. மோனிகா உடனான கவினின் நட்புதான் ஒரு வேலை லாஸ்லியா பிரேக் அப் செய்ய காரணமா, அல்லது இவர்கள் இருவருக்கும் பிரேக்கப் ஆன பிறகு மோனிகாவும், கவினும் காதலித்தார்களா என்பது போன்ற கேள்விகள் தற்போது ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

Also Read:பேர், புகழ் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் 5 பிரபலங்கள்.. கவினுக்கு மூன்று மாதம் அடைக்கலம் தந்த விஜய் டிவி

Trending News