திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விஜய்யை சுற்றி சூழ்ச்சியா? புஸ்ஸி ஆனந்த் மீது நிர்வாகிகள் குற்றச்சாட்டு! அடுத்து என்ன நடக்கும்?

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மக்கள் மனதில் இடம்பெற்று, வெற்றி பெற்றவர்கள் ஒருசிலர் தான். அந்த வரிசையில் அரசியலில் குதித்துள்ளார் விஜய். கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த அவர், அடுத்து, கொடி மற்றும் கொடிப்பாடல் வெளியிட்டு, அக்டோபர் 27 ஆம் தேதி மாநாடு நடத்தினார்.

இத்தனை நாட்கள் காத்திருந்து, ஒவ்வொருவரிடம் ஆலோசனை கேட்டு, சினிமா? அரசியலா என தீவிர யோசனை செய்து, மக்களுக்கு உதவ அரசியல் வர தீர்மானித்து, 200 கோடி சம்பளத்தை வேண்டாம், கேரியரின் உச்சத்தையும்என உதறித் தள்ளிவிட்டு வந்துள்ளதாக விஜய்யே தனது மாநாட்டில் கூறினார்.

தன்னை முன்னிலைப் படுத்தி வரும் புஸ்ஸி ஆனந்த் மீது புகார்!

இப்படி தான் நேசிக்கும் சினிமாவை விட்டுவிட்டு, சினிமாவில் மக்களுக்குச் சேவை செய்ய வந்திருக்கும் விஜய், சொந்த் முயற்சியால், தன் கட்சியை இத்தனை தூரம் பிரபலமாக்கியிருக்கிறார். தன் செலவில்தான் மாநாடும் நடத்தி வருகிறார். அடுத்து வரும் 2026 தேர்தலுக்காக கட்சியையும் பலப்படுத்தி வருகிறார்.

இப்படியிருக்க, அவரது தளபதியாக இருக்கும், புஸ்ஸி ஆனந்த் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அவருக்கு எதிராக நிர்வாகிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படவே, அது குரூஸ் பெர்னாண்டஸ் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் வெளிப்படையாக தெரிந்தது. அப்போது, இருதரப்பும் தனித்தனியாக மாலை அணிவித்தனர். அப்போது அஜிதாவை, பாலாவை மாவட்ட செயலாளர் என அவரது ஆதரவாளர்கள் கோசம் போட்டு அழைத்தனர்.

இது கட்சித் தலைமைக்குத் தெரிந்து சென்னைக்கு அழைத்து புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பாதியிலேயே, தற்காலிக மா,.செ அஜிதா வெளியேறினார். அவர் தன் ஆதங்கத்தையும் கொட்டினார்.

முளையிலேயே கிள்ளி எறிவாரா விஜய்?

இதையடுத்து, களத்தில் துடிப்பாகச் செயல்பட்டு வரும் நிர்வாகிகளை கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதில் மா.செ., பதவிக்குப் போட்டியிடுபவர்கள் முக்கால் வாசிப்பேர் அக்கட்சி பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமானவர்கள் என்ற தகவல் பரவியது. அவர் இதற்காகவே தனிராஜ்ஜியம் நடத்தி வருவதாகவும், தன்னை தாண்டி யாரும் விஜய்யை நெருங்கவிட கூடாது என அவர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது விஜய்கும் அவரது கட்சிக்கும் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிய, இதுகுறித்து விஜய் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நிர்வாகிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Trending News