வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குடும்பமாய் சிவகார்த்திகேயனை அழிக்க நினைத்து நடத்திய சதி.. இந்த மாதிரி கொடுமை நடக்குமா?

பொதுவாகவே சிவகார்த்திகேயனுக்கு சினிமா துறையிலும் மற்றும் ரசிகர்களிடமும் ஒரு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக சில விஷயங்கள் நடந்திருந்தாலும் கண்டு கொள்ளாமல் அவருடைய முழு கவனமும் நடிப்பதில் மட்டும் தான் இருந்திருக்கிறார். ஆனால் இவரை எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என்று குடும்பமாய் சதி செய்திருக்கிறார்கள்.

அதாவது எப்படி என்றால் சிவகார்த்திகேயனிடம் நைசாக பேசி அவரிடம் நான்கு படங்களில் நடிப்பதற்கு கால் சீட் வாங்கி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயனும் அவரது படங்கள் சமீபத்தில் கொஞ்சம் டல் அடித்தது. அதனால் நமக்கு நான்கு படம் தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் குறைவான சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சம்மதித்து அதற்காக சிறிய தொகை அட்வான்ஸ் ஆக வாங்கி இருக்கிறார்.

Also read: மாமன்னன் உதயநிதியை அசர வைத்த சிவகார்த்திகேயன்.. ட்ரெண்டாகும் நியூ லுக் போட்டோ

ஆனால் அதற்கடுத்து அதற்கான படப்பிடிப்பு கொஞ்சம் கூட தொடங்கவே இல்லை. இதனால் சிவகார்த்திகேயன் எப்பொழுது படப்பிடிப்பு என்று கேட்கும் போதெல்லாம் அதற்கு சரியான பதில் கூறாமல் இருந்திருக்கிறார்கள். இதனால் பொறுமை இழந்த சிவகார்த்திகேயன் அந்த குடும்பத்திடம் சென்று வேறு படங்களில் நடிக்க செல்லலாமா என கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர்கள் உங்கள் விருப்பம் போல் நடித்துவிட்டு வாருங்கள் என்று கொஞ்சம் அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார்கள். பிறகு சிவகார்த்திகேயன் வேற படங்களில் நடிப்பதற்கு போனால் அங்குள்ள தயாரிப்பாளர்கள் நீங்கள் ஏற்கனவே கமிட்டான படத்தை நடித்து முடித்துவிட்டு வாருங்கள்.

Also read: இந்த ரெண்டு படம் தான் சிவகார்த்திகேயனை தூக்கிவிட்டது.. கமலுடன் இணையவும் வாய்ப்பு கிடைத்தது

இல்லை என்றால் அதை ஒரேடியாக ரத்து செய்துவிட்டு வாங்க என்று கூறியுள்ளனர். இப்படியே அங்கேயும் இங்கேயும் தொடர்ந்து அவஸ்தைப்பட்டு இருந்திருக்கிறார். பிறகு தான் தெரிந்திருக்கிறது இது எல்லாம் இவருக்கு விரித்த சூழ்ச்சி வலை என்று. எதற்காக என்றால் இவர் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்பதற்காகவே சிவகார்த்திகேயனுக்கு போடப்பட்ட ஒப்பந்தம் தான் என்று தெரிய வந்துள்ளது.

அதன் பின் எப்படியோ பல போராட்டங்களுக்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தை எல்லாம் ரத்து செய்து தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி இவரை வச்சு செய்த குடும்பம் எந்த குடும்பம் என்று இத்தனை விஷயங்களை சொன்ன செய்யார் பாலு அந்த குடும்பம் யார் என்று காட்டிக் கொடுக்கவில்லை.

Also read: டக்கால்டி வேலை காண்பித்த சிவகார்த்திகேயன்.. கடைசியில் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்ட சம்பவம்

Trending News