திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

நாமினேஷனுக்கு வராமலே எஸ்கேப் ஆகும் போட்டியாளர்.. தொடர்ந்து காப்பாற்றப்படும் காரணம்

கடந்த சில நாட்களாகவே விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதாவது இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலேயே இந்த சீசனில் தான் அதிகமாக நியாயமில்லாத எலிமினேஷன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்போது தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருப்பது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ரட்சிதா மகாலட்சுமி, கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் எதற்காக வீட்டிற்குள் வந்தோம் என்றே தெரியாமல் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது திறமையான போட்டியாளர்களை விஜய் டிவி வெளியேற்றி வருவது கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் இதுவரை நாமினேஷனில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

Also read: இந்த ரெண்டு பேரு என்ன கிழிச்சிட்டாங்கன்னு உள்ள வச்சிருக்கீங்க பிக்பாஸ்.. அநியாயமாக வெளியேற்றப்பட்ட தனலட்சுமி!

ஏனென்றால் அவரும் விஜய் டிவியை சேர்ந்த ஒரு பிரபலம் தான். அந்த ஒரு காரணத்துக்காகவே அமுதவாணன் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இவருடைய நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள் இவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறி வந்தனர். ஏனென்றால் ஒவ்வொரு டாஸ்க்கிலும் இவருடைய பேச்சும் அணுகுமுறையும் பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அதிலும் அசீமுக்கும் இவருக்கும் நடக்கும் சண்டை தான் சோசியல் மீடியாவில் பெரும் விவாதமாக பேசப்படுகிறது. அதனால் இவர் நாமினேஷனில் சிக்கினால் எப்படியாவது இவரை வெளியேற்றிவிட வேண்டும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். அதற்கான வாய்ப்பு தான் இன்னும் யாருக்கும் அமையவில்லை.

Also read: பிக் பாஸில் தனலட்சுமி வாங்கிய சம்பளம்.. கொடுத்த கன்டென்ட்டுக்கு கம்மிதான்!

இந்த வாரமாவது இவர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இந்த வார கேப்டன் பதவியில் அமுதவாணன் ஜெயித்துள்ளார். ஆனாலும் அவருடைய பெயரை நாமினேஷனில் கூறலாம் என்று பிக் பாஸ் அறிவித்தார். உடனே அசீம் அமுதவாணனை நாமினேட் செய்தார்.

ஆனால் மற்ற யாரும் அவர் பெயரை கூறவில்லை. இதிலிருந்தே அவர் இந்த வாரமும் தப்பித்து விட்டார் என்று தெளிவாக தெரிகிறது. இது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது. இப்படித்தான் விஜய் டிவி தங்கள் சேனலின் பிரபலங்களை ஏதாவது ஒரு விதத்தில் காப்பாற்றிக் கொண்டே வருகிறது. அதனால் அமுதவாணனும், மைனா நந்தினியும் இப்போதைக்கு இந்த வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.

Also read: உச்சகட்ட கோபத்தில் ரோஸ்ட் போட்ட ஆண்டவர்.. தன்மானம், சுயமரியாதை இருக்கிறவன் மற்றவரை அவமதிக்கக் கூடாது

Trending News