Veera Dheera Sooran: ரஜினி பண்ணா மட்டும் ஏன் போர் கொடி தூக்கிட்டு வரீங்க என்ற கேள்வி இப்போது சமூக வலைத்தளத்தில் எழுந்து வருகிறது.
அதுவும் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தின் டீசர் வெளியான பிறகு தான் இந்த சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விக்ரம் எல்லோருக்குமான ஜனரஞ்சக கலைஞர். அவருக்கு இதுவரை தமிழ் சினிமா ரசிகர்களால் எந்த விதை எதிர்ப்பும் வந்தது கிடையாது.
விக்ரம் பண்ணது நியாயமா?
தற்போது எழுந்திருக்கும் பிரச்சனையும் எதிர்ப்பு என்று சொல்ல முடியாது, சாதாரண விமர்சனம் தான்.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி மற்றும் சித்தா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் வீர தீர சூரன்.
இந்த படத்தில் விக்ரமுடன் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். 1.47 நிமிடங்கள் கொண்ட படத்தின் டீசர் நேற்று வெளியானது.
இந்த வீடியோ படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விக்ரமின் முந்தைய தோல்வி படங்களில் இருந்து அவரை மீண்டும் இந்த படம் மீட்டெடுத்து விடும் என்பது சினிமா ரசிகர்களின் கருத்து.
டீசரில் இரண்டு மூன்று காட்சிகள் விக்ரம் துஷாரா விஜயனுடன் ரொமான்ஸ் செய்வது போல் அமைந்திருக்கிறது.
துஷாரா விஜயன் விக்ரமை விட ரொம்பவும் சின்ன பெண். அவருக்கு தற்போது தான் 27 வயதாகிறது. விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கும் 27 வயது தான்.
தன்னுடைய மகள் வயது மதிக்கத்தக்க ஹீரோயினுடன் விக்ரம் ரொமான்ஸ் செய்வது சரிதானா. சூப்பர் ஸ்டார் இதே மாதிரி நடித்தால் மட்டும் தான் பிரச்சனைகளை எல்லாம் கிளப்புகிறார்கள்.
மற்ற நடிகர்களுக்கு இது விதிவிலக்கு கிடையாதா என ஒரு சில கேள்விகள் இந்த டீசருக்கு பிறகு எழுந்திருக்கிறது.