ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அந்தரங்க வேலை செய்து பல வாய்ப்புகளை தட்டிப் பறித்த நடிகை.. பேட்டியில் வாய்விட்டு மாட்டிய சம்பவம்

Actress Sri Reddy: நடிகைகள் பல தங்களுடைய சிறந்த நடிப்புக்காகவும், வசீகரமான அழகிற்காகவும் ரசிகர்களிடையே பிரபலமாகுவார்கள். ஆனால் இந்த நடிகை வாய்ப்புக்காக பல முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தன்னை தவறாக பயன்படுத்தி பின்னர் பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்று பகிரங்கமாக புகார் அளித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர்.

சில வருடங்களுக்கு முன்பு மீ டு புகார்கள் அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், பொது வெளியில் ஆடையை கழற்றி வித்தியாசமாக போராட்டம் செய்தவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. தென்னிந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி பிரபலங்கள் தன்னை தவறாக பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக ஆதாரத்துடன் நிரூபித்து ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இதில் தமிழ் சினிமா பிரபலங்களும் அடங்குவர்.

Also Read:மில்க் நடிகையே கதி என்று கிடந்த மூன்றெழுத்து வில்லன்.. விவாகரத்திற்கு பின்னால் இருக்கும் காரணம்

ஆரம்பத்தில் இவருக்காக பலர் சப்போர்ட் செய்தாலும் போக போக இவருடைய கதைகளை எல்லாம் கேட்டு வெறுக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அந்த புகாருக்கு பின்னரும் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது முன்னணி நடிகர்களை பற்றி அந்தரங்க விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பேசி அதன் மூலம் பிரபலமானார். இதனால் பாதிக்கப்பட்ட நிறைய நடிகர்களும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் இறுதியில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. அந்த ரசிகர் இவர் அந்தரங்க வேலை செய்ததை பகிரங்கமாக பல பேர் முன்னிலையில் கேட்கும் பொழுது, முதலில் மறுத்த நடிகை பின்னர் சமாளிக்க முடியாமல் ஆம் தான் அந்த தொழில் செய்தேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Also Read:2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

இப்போது சினிமா மட்டுமில்லாமல் சின்னத்திரை வரைக்கும் ஹனி டிராப் என்ற வார்த்தை ரொம்ப சகஜமாகிவிட்டது. அதாவது ஒருவருடன் நெருங்கி பழகிவிட்டு அதை வைத்தே அந்த நபரை மிரட்டி பணம் பறிப்பது. சமீபத்தில் சின்னத்திரை நடிகர் அர்னவ் மீது கூட அவருடைய மனைவி திவ்யா இது போன்ற ஒரு புகாரை கொடுத்திருந்தார். நடிகை ஸ்ரீ ரெட்டியும் இது போன்ற தொழிலை அமெரிக்காவில் செய்திருக்கிறார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி அமெரிக்காவில் ஆறு பேர் கொண்ட ஒரு குழுவில் இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் தெரியாமல் மற்றொருவருடன் நெருங்கி பழகுவது, பின்னர் அதை வைத்து பணத்தை மிரட்டி பறிப்பது என செய்திருக்கிறார். இவர் இன்னும் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறாராம். இதை அந்த நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் அழுத்தம் திருத்தமாக கேட்கும் பொழுது சமாளிக்க முடியாமல் ஆமாம் என்று ஒப்பு கொண்டிருக்கிறார்.

Also Read:காதலருடன் லிப்லாக்கில் மூழ்கிக் கிடந்த நடிகை.. நைட் பார்ட்டியில் அரங்கேறிய கூத்து

- Advertisement -

Trending News