செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மகளை பற்றிய உருகிய ராபர்ட் மாஸ்டர்.. அத்தனையும் பொய் என ஆதாரத்தை காட்டும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் சீசன் 6 கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கடைசி மூன்று சீசன்களாக டான்ஸ் மாஸ்டர்களை களமிறக்கும் விஜய் இம்முறை ராபர்ட் மாஸ்டரை களமிறக்கி இருக்கிறது. இவர் ‘போடா போடி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் ‘கதை சொல்லும் டாஸ்க்’ நடைபெற்றது. மற்ற சீசன்களில் இதுபோன்ற டாஸ்குகளில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார்கள். இந்த முறை இந்த டாஸ்கிலேயே பிரச்சனையை கிளப்பும் விதமாகபிக்பாஸ், சொல்லும் கதை பிடிக்கவில்லையென்றால் சக போட்டியாளர்கள் ரெட் லைட் அழுத்தி கதையை நிறுத்திவிடலாம் என்று கூறியிருந்தார்.

Also Read: ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?

இதனால் மற்ற சீசன்களை போல இழுவையாக இல்லாமல் இந்த டாஸ்க் சட்டென முடிந்துவிட்டது. நிறைய போட்டியாளர்களின் கதைகள் சக போட்டியாளர்களால் நிராகரிக்கப்பட்டது. ஒரு சிலரின் கதைகளே முழுமையாக கேட்கப்பட்டது. அதில் ராபர்ட் மாஸ்டரின் கதையும் ஒன்று. அவருடைய கதையை மைனா நந்தினி மட்டுமே நிராகரித்தார்.

ராபர்ட் மாஸ்டர் பேசும் போது, வீட்டின் கடைசி பிள்ளையான தன் மீது அதிக எதிர்பார்ப்புகளை பெற்றோர்கள் வைத்திருந்ததாகவும் ஆனால் தனக்கு சின்ன வயதிலேயே போலியோ அட்டாக் வந்ததாகவும், பின்பு தன்னுடைய தந்தையின் முயற்சியாலேயே நடந்ததாகவும், நடனம் கற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

Also Read: பணம், புகழை விட எனக்கு இதுதான் முக்கியம்…. சாப்பிடாமல் அடம் பிடித்து வெளியேறிய ஜிபி முத்து

மேலும் பேசிய அவர் தன்னுடைய திருமணம் காதல் திருமணம் என்றும், மனைவியின் பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார். அவருடைய மனைவி தான் படிக்கவில்லை என்ற காரணத்திற்காக தன்னை விட்டு பிரிந்துவிட்டதாகவும் அப்போது அவருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் கூறினார். அதன் பின்னர் எதேர்சையாக மகளையும், மனைவியும் பார்க்க நேரிட்ட போது மகள் தன்னை அங்கிள் என்று கூப்பிட்டதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.

மகளை ஏழு வயதிற்கு பிறகு பார்க்கவேயில்லை என்றும், தன்னுடைய மகள் தன்னை பற்றி தெரிந்து கொள்ளவே பிக்பாஸ் வந்து இருப்பதாகவும் கூறினார். இந்நிலையில் நெட்டிசன்கள் ராபர்ட் மாஸ்டரின் சமூக வலைதள பதிவு ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் மாஸ்டர் ஒரு வீடியோவில் என் மகள் என்று பதிவிட்டு இருக்கிறார். இதுதான் இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த பெண் தான் ராபர்டின் மகள் என்று சொல்லி வருகின்றனர். இதனால் ராபர்ட் மாஸ்டர் பொய் சொன்னாரா இல்லை அந்த பெண் அவருடைய அண்ணனின் மகளா என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Also Read: ஜிபி முத்துக்கு பிடித்த விஜய் டிவியின் செல்லப்பிள்ளை.. இவர பிடிக்காத ஆளே இல்ல

Robert master and his daughter

Trending News