வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காசு கொடுக்கிற முதலாளி கெஞ்சினாலும் போறது இல்ல.. நேசிப்பாயாவால் காற்றில் பறந்த நயன்தாராவின் மானம்

Nayanthara: பல வருடங்களாக நயன்தாரா தான் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் சாதாரண ஹீரோயின் ஆக வளம் வந்த இவர் தற்போது டாப் ஹீரோக்களுக்கு இணையாக மாறியுள்ளார்.

அதனாலயே இவர் ஒரு படத்தில் நடிக்க எத்தனை கண்டிஷன் போட்டாலும் மறுக்காமல் கமிட் செய்து விடுகின்றனர். அதில் பட ஆடியோ லான்ச், ப்ரமோஷன் போன்ற எதற்கும் வரமாட்டேன் என்பதுதான் இவருடைய முக்கிய கண்டிஷன்.

இதுவரை இப்படித்தான் அவர் இருக்கிறார். பணம் கொடுக்கிற தயாரிப்பாளர் கெஞ்சினால் கூட எந்த விழாக்களுக்கும் செல்ல மாட்டார். அப்படிப்பட்ட நயன் தற்போது வேறு ஒரு பட விழாவிற்கு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம் போன்ற பல படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது நேசிப்பாயா என்ற படத்தை இயக்கி வருகிறார். முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் தான் இதன் ஹீரோ. அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.

காற்றில் பறந்த நயன்தாராவின் மானம்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. அதற்கு தான் நயன்தாரா வருகை தந்திருந்தார். இதே விழாவுக்கு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பல படங்களில் நடித்த ஆர்யாவும் வந்திருந்தார்.

அவர்கள் முன்னிலையில் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் நயன்தாரா ஊதா நிறத்தில் கிளாமராக புடவை அணிந்திருந்தது இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் ப்ரமோஷனுக்கே வராத அம்மணிக்கு இங்க என்ன வேலை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படியெல்லாம் பேச்சு வரும் என்று தெரிந்து தான் அவர் மேடையில் நான் சினிமா விழாக்களில் அதிகமாக கலந்து கொள்வதில்லை.

ஆனால் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். அந்த நட்பின் காரணமாகவே வந்தேன் என விளக்கம் கொடுத்துள்ளார். ஆனாலும் இதற்குப் பின்னணியில் அவருடைய மாஸ்டர் பிளான் இருக்கும் என்று தெரிகிறது.

ஏனென்றால் விஷ்ணுவர்தன் விரைவில் அஜித்துடன் இணைய இருப்பதாக நீண்ட நாட்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நயன்தாரா அந்த பட வாய்ப்பை பிடிப்பதற்காக கூட இந்த விழாவிற்கு வந்திருக்கலாம்.

மேலும் தற்போது அவருடைய கையில் தமிழ், மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. அதில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கூட இவர்தான் ஹீரோயின் என்று கூட ஒரு பேச்சு அடிபடுகிறது. இப்படி பிசியான நேரத்தில் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார் என்றால் நயன்தாராவின் திட்டம் நிச்சயம் பெரிதாகத்தான் இருக்கும்.

ப்ரமோஷனுக்கே வராத நயன்தாராவின் கொள்கை

Trending News