செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மகேஷ் பாபுவின் இந்த பட காப்பி தான் விஜய்யின் வாரிசு.. ஆதாரத்துடன் வெளியான புகைப்படத்தால் வெடித்தது சர்ச்சை

விஜய்யின் வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.

இந்த சூழலில் பிரபல வார இதழ் ஒன்றுக்கு இயக்குனர் வம்சி பேட்டி கொடுத்திருந்தார். இதில் வாரிசு படத்தின் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்த ரசிகர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படத்தை அப்படியே காப்பி அடித்துள்ளார்கள் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Also Read : ரிலீஸுக்கு முன்னரே கொட்டிய பணமழை.. ஜெட் வேகத்தில் எகிறபோகும் விஜய்யின் சம்பளம்

அதாவது வம்சி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான மகரிஷி படம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இதே படத்தை ரீமேக் செய்துள்ளார் வம்சி என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதாவது மகரிஷி படத்தில் உள்ள புகைப்படங்களும், இந்த புகைப்படங்களும் பெரும்பாலானவை ஒத்துப் போகிறது.

ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் தமிழில் ரீமேக் செய்து விஜய் நடித்துள்ளார். அதாவது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் மகேஷ் பாபு படத்தின் ரீமேக் தான். அந்த வகையில் தற்போது மகரிஷி படத்தின் ரீமேக் தான் வாரிசு என கூறப்படுகிறது.

Also Read : துணிவுக்கு தண்ணி காட்டும் வாரிசு விஜய்.. கூட்டி கழிச்சு தயாரிப்பாளர் போட்ட 1000 கோடி கணக்கு

ஆனால் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. ஆகையால் ஏற்கனவே தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மகரிஷி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் காபி தான் வாரிசு படம் என்று தெரிந்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

maharshi-varisu

மேலும் வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே இந்த புகைப்படத்தால் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் தற்போது வாரிசு படக்குழு மிகுந்த ஆப்சட்டில் உள்ளதாம். ஆனால் வாரிசு படம் வெளியான பிறகு தான் மகரிஷி படத்தின் ரீமேக் என்பதா தெரியவரும்.

maharshi-varisu

Also Read : விஜய்யை பார்த்து மிரண்ட வாரிசு படக்குழு.. தளபதி எச்சரித்ததன் காரணம் இதுதான்

Trending News