திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கவினின் பெயரை கெடுக்க நடக்கும் சதி.. உஷாரா இருந்தா தான் தப்பிக்க முடியும் பாஸ்

Kavin: சினிமாவை பொறுத்த வரைக்கும் எந்த ஒரு பேக்ரவுண்டும் இல்லாமல் நடிக்க வந்து ஜெயிப்பது என்பது ரொம்பவும் கஷ்டமான விஷயம். அப்படியே அடிச்சு புடிச்சு உள்ளே வந்து கொஞ்சம் வெற்றியை பார்த்தாலும் எதில் சிக்குவான் போட்டு தள்ளலாம் என ஒரு கூட்டமே காத்திருக்கும். அப்படித்தான் இப்போது நடிகர் கவினுக்கு குறி வைத்து இருக்கிறார்கள்.

நடிகர் கவின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சின்ன சின்ன ரோல் பண்ணி சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க முயற்சி செய்தவர். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களிடையே நல்ல பரீட்சையமானாலும் அவருக்கு முதல் படம் என்பது தோல்வியில்தான் முடிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட பிறகு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு கவினுக்கு லிப்ட் படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான வெற்றியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து வெளியான டாடா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கிட்டத்தட்ட கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்று சொல்லும் அளவுக்கு பெயர் வாங்கினார். தமிழ் சினிமாவின் கடவுளாக பார்க்கப்படும் உலகநாயகன் கமலஹாசன் கவினை நேரில் அழைத்து பாராட்டினார்.

Also Read:ஒன்னு ரெண்டு படங்கள் ஹிட்டானதால் மெதப்பில் சுற்றும் கவின்.. இப்படியே போனா தூங்கு மூஞ்சி கெதி தான்

சமீபத்தில் மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்த கவின் ஸ்டார் என்னும் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் அவரைப் பற்றி நிறைய தவறான செய்திகள் வெளியாகின. அதாவது கவின் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வருவதில்லை, அப்படியே வந்தாலும் கொஞ்ச நேரத்திலேயே கிளம்பி விடுகிறார், ஓவர் ஆட்டிட்யூட் காட்டுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

கவினுக்கு கிடைத்த கெட்ட பெயர்

இரண்டு படங்கள் ஹிட் கொடுத்ததும் கவினுக்கு தலைக்கனம் அதிகமாகிவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. உண்மையில் நடந்த விஷயமே வேறு. நடிகர் கவின் ஸ்டார் பட குழுவினரால் ரொம்பவும் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். சொன்ன நேரத்திற்கு கவின் படப்பிடிப்புக்கு போனாலும், இரண்டு மணி நேரம் லேட்டாக தான் ஷூட்டிங் ஆரம்பிப்பார்களாம்.

ஆறு மணிக்கு சூட்டிங் முடிந்து விடும் என்று சொல்லி பத்து, பன்னெண்டு மணி வரை இழுத்தடிக்கிறார்களாம். இதனால்தான் அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக கவின் படப்பிடிப்பிற்கு லேட்டாக சென்று இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் இவரின் பெயரை கெடுப்பதற்காகத்தான் இது போன்ற சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கவின் தான் சூதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

Also Read:லீக்கானது ஜேசன் சஞ்சய்- கவின் படத்தின் ஸ்டோரி.. சூப்பர் ஹிட் படத்தின் காப்பியா.?

Trending News