வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஊர் வாயை அடைக்கும் தனம்.. இடத்தக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மருமகள்

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரே வீட்டில் நான்கு அண்ணன் தம்பிகளும், தங்களது மனைவி குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிலேயே ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் வைத்திருப்பதால், பெரும்பாலும் பெண்களே பியூட்டி பார்லருக்கு வருவதால் குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் தனக்கு வாடிக்கையாளர்கள் வரவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார்.

Also Read: நம்ம வச்சு கழுத்தை அறுத்துட்ட மீனா.. சொத்தை ஆட்டைய போட இப்படி ஒரு பிளானா?

அப்போது கோபத்தில் மீனா, வீட்டில் இருக்கும் ஆண்களை வெளியில் துரத்தி விடுவோம். நாம் மட்டும் இருப்போம் என்று நக்கலாக பேசுகிறார். அவர் பேசுவது சரி என்றாலும் ஐஸ்வர்யா தன்னுடைய பியூட்டி பார்லர் தொழில் சூடு பிடிக்காமல் இருக்கிறதே என வருத்தப்பட்டு பேசும் போது, அதை மீனா புரிந்து கொள்ளாமல் ஐஸ்வர்யாவை ‘இருக்க இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடிக்கும் கதையா இருக்கே’ என்று தேவையில்லாமல் திட்டுகிறார்.

அதன் பிறகு அவர்களை சமாதானப்படுத்திய தனம், வீட்டைவிட்டு வெளியே போனபோது அக்கம்பக்கத்தினரிடம் தாங்கள் புது வீடு கட்டுவதைப் பற்றி சொல்கிறார். கதிர்-முல்லை இருவரும் வீட்டைவிட்டு கிளம்பியதால் உங்களுக்கு இப்படி ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது என போட்டு வாங்கிய அக்கம்பக்கத்தினரின் வாயை அடைக்கும் படி சரியாக பதிலடி கொடுத்தார்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

நாங்கள் புது வீடு கட்டினாலும் அதில் கதிர்-முல்லைக்கும் பங்கும் உண்டு. அவர்களுக்கு என்று தனி ரூம் கட்டப் போகிறோம். சீக்கிரம் அவர்கள் எங்களுடன் தான் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் ஒன்றாக வாழப்போகிறோம். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள் என சவால் விடுகிறார்.

மறுபுறம் முல்லை-கதிர் இருவரும் தாங்கள் ஆரம்பித்த ஹோட்டலில் லாபம் கிடைக்க வேண்டும் என புது புது யுக்திகளை கையாளுகின்றனர். தற்போது 50 ரூபாய்க்கு எது வேணாலும் சாப்பிடலாம் என்ற சலுகையுடன் வாடிக்கையாளர்களை ஹோட்டலுக்கு வரவைக்க பார்க்கின்றனர்.

Also Read: 1000 எபிசோடை கடந்த விஜய் டிவி சீரியல்.. இறந்த நடிகைக்கு செய்த நெகிழ்ச்சியான சம்பவம்

அவர்கள் எண்ணியது போல் நாளுக்கு நாள் லாபமும் ஹோட்டலில் வருவதால், சீக்கிரம் சவால் விட்டபடி 5 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைய போகின்றனர். இருப்பினும் இந்த சீரியலில் அரைத்த மாவையே அரைப்பதால் சின்னத்திரை ரசிகர்கள் சலிப்படைந்து உள்ளனர்.

Trending News