செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

படுத்த படுக்கையில் உயிர் நண்பன், 45 வருடங்களாக நன்றியுடன் இருக்கும் வைரமுத்து.. எழுந்து வா இமயமே!

Vairamuthu: வைரமுத்துவை பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் அவருடைய கவிதை திறமைக்கு பெரும்பாலானோர் தற்போது வரை அடிமைதான். இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும் அவருடைய பாடல்களில் உள்ள வரிகள் காலத்தால் அழியாமல் இருப்பதுடன் புது பொலிவுடன் இருப்பதே இவரது வெற்றிக்கு காரணம்.

இந்நிலையில் வைரமுத்துவின் நண்பர் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் அவருக்கு உத்வேகம் கொடுக்க கவிதையுடன் சென்றிருக்கிறார். மருந்தைவிட மாமருந்தாக உள்ளது வைரமுத்துவின் கவிதை என 45 வருட நட்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பலரையும் கண்ணீரில் ஆழ்த்தி இருக்கிறது.

Also Read : அந்த ஒரு வரி வச்சே தீருவேன் என ரஜினியிடம் சண்டையிட்ட வைரமுத்து.. இப்ப வரை கொண்டாடப்படும் பாடல்

அதாவது மண்மனம் மாறாத படங்களை கொடுத்து கிராமத்தின் பசுமையை போற்றும் இயக்குனர் தான் பாரதிராஜா. அற்புதமான பல படைப்புகளை கொடுத்த பாரதிராஜா இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். இப்போது 82 வயதாகும் பாரதிராஜா வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பிரச்சனையை சந்தித்துள்ளார்.

இதன் காரணமாக பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வைரமுத்துவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பாரதிராஜாவின் படங்கள்தான். அந்த காலத்தில் பாரதிராஜா படம் என்றாலே கண்டிப்பாக வைரமுத்துவின் வரிகள் இடம் பெறும். இந்த நட்பின் காரணமாக பாரதிராஜாவுக்காக வைரமுத்து கவிதை ஒன்று பாடி இருக்கிறார்.

Also Read : 50 லட்சம் போட்டு 500 லட்சம் வசூல் செய்த ஒரே படம்.. பாலச்சந்தர், பாரதிராஜாவுக்கு நிகராக வந்திருக்க வேண்டிய இயக்குனர்

அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து வெளியிட்டு இருக்கிறார். எழுந்து வா இமயமே என்று தொடங்கும் இந்த கவிதையில் ஆட்டு புழுக்க கலையாச்சி, மாட்டு குரலும் இசையாச்சி என தனக்கே உரித்தான வரிகள் பாரதிராஜாவுக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார் வைரமுத்து.

இந்த வரிகளைக் கேட்டு தன்னை மறந்து பாரதிராஜா கண்ணீர் உடன் பேசினார். மேலும் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இப்போது பாரதிராஜா உடல் நலம் தேறி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read : ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

Trending News