பொதுவாக நல்ல படங்கள் வந்தால் அந்த இயக்குனர்களை அழைத்து பாராட்டுவது ரஜினியின் குணம். இப்படி அவர் பல படங்களை பாராட்டி பரிசுகளும் அழைத்துள்ளார். சமீபத்தில் வளரும் இயக்குனர் ஒருவருக்கு தங்கச்செயின் அளித்து அவரை ஊக்குவித்து இருக்கிறார்.
கந்தாரா படம் தமிழில் வந்து சக்கை போடு போட்டது. ரிஷப் செட்டி இயக்கி, நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து சப்தமி கௌடா, கிஷோர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கேஜிஎஃப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பெல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
Also Read: தனுஷ் படக் காட்சியை சுட்ட கன்னட திரைப்படம்.. 150 கோடி வசூலுக்கு இதுதான் காரணம்..
சமீபத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் பல பாசிட்டிவ் விமர்சனங்களால் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படம் 16 கோடி பட்ஜெட்டில் தான் உருவானது. இந்தப் படத்தில் பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நில பிரச்சனையை கடந்த கால சூழ்நிலையில் அடிப்படையில் சமரசமின்றி பதிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் காந்தாரா பட நடிகர் ரிஷப் அவர்களுக்கு போன் செய்து படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி ரஜினியிடம் கொடுத்துள்ளார். ரிஷப் செட்டி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் நீண்ட நேரம் கன்னடத்திலேயே பேசி இருந்துள்ளனர்.
பிறகு ரஜினி சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு ரிஷபை அழைத்துள்ளார். அவரை நேரில் சந்தித்த ரஜினி, காந்தாரா படத்தை குறித்து நெகிழ்ந்து பேசி இருக்கிறார். அத்துடன் ரஜினிகாந்த் இயக்குனர் ரிஷப் செட்டிக்கு தங்க செயினை பரிசாக கொடுத்துள்ளார்.
படத்தில் வரும் கதையெல்லாம் புதுவிதமாக இருந்தது. தன்னுடைய 50 வருட சினிமா பயணத்தில் இதுவரை பார்த்திராத சிறந்த கதை . இந்த மாதிரி ஒரு விஷயத்தை சூப்பர்ஸ்டார் இதுவரை பார்த்ததில்லை என்று ரிஷப் செட்டி இயக்கிய காந்தாரா படத்தை புகழ்ந்துள்ளார்.
இயக்குனர் நடிகர் ரிஷப் செட்டிக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி
![rajini-kandhara-movie-director-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/11/rajini-kandhara-movie-director-cinemapettai.jpg)
Also Read: காந்தாரா ஹீரோக்கு போன் போட்ட ரஜினி.. வாய்ப்பை வைத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்ட இயக்குனர்