Kanguva: யூடியூப் சேனல் காரர்கள் தியேட்டர் வாசலில் நின்று படத்தைப் பற்றி விமர்சனம் எடுப்பதற்கு தடை விதிக்க சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய பாட்டமான பதிலை சொல்லி இருக்கிறார்.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி 24 மணி நேரத்துக்குள்ளேயே நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் ஆக்கிரமித்து விட்டன. இது குறித்து சூர்யாவின் மனைவி மற்றும் நடிகை ஜோதிகா தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று கூடி எந்த ஒரு படத்திற்கும் முதல் நாள் முதல் ஷோ விமர்சனம் என்ற பெயரில் யூ டியூபர்கள் தியேட்டர் வாசலில் மக்களிடம் ரிவ்யூ கேட்க கூடாது. வெளி மாநிலத்திற்கு சென்று படம் பார்த்துவிட்டு வந்தோம் விமர்சனம் செய்யக்கூடாது.
நாங்க பலிகிடா ஆக முடியாது
எந்த ஒரு படத்திற்கும் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்திற்குள் விமர்சனம் செய்யக்கூடாது என முடிவு எடுத்திருக்கிறார்கள். விரைவில் கோர்ட் மூலம் தடை விதிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதாவது சின்ன பட்ஜெட் படங்களுக்கு விமர்சனம் என்பது ரொம்பவும் முக்கியம். எங்களால் பெரிய அளவில் செலவு செய்து படங்களை பிரமோஷன் செய்ய முடியாது. விமர்சனங்களை பார்த்து தான் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்து விட்டு வந்து விமர்சனம் கேட்பதும் ஒரு அலாதி. நாம் பார்த்த இந்த படத்தை விமர்சகர் இப்படி ஒரு கோணத்தில் பார்த்திருக்கிறாரா என்பது வித்தியாசமான உணர்வை கொடுக்கும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் சில கட்டுப்பாடுகளுடன் படத்தின் விமர்சனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். உண்மையில் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் பார்த்துவிட்டு அதன் பின்னர் மக்கள் தியேட்டருக்கு போய் படம் பார்த்து வெற்றி பெற்ற படங்களும் இருக்கிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் பெரிய ஹீரோக்களின் பெரிய படங்களை காப்பாற்றுவதற்கு இது போன்று ஒரு தடை விதிப்பது சரியான முடிவல்ல. நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி சொல்லியது போல் நல்ல கண்டன்டு என்றால் கண்டிப்பாக மக்களிடம் போய் சேரும். அதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.