செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

50 லட்சம் போட்டு 500 லட்சம் வசூல் செய்த ஒரே படம்.. பாலச்சந்தர், பாரதிராஜாவுக்கு நிகராக வந்திருக்க வேண்டிய இயக்குனர்

Bharathiraja – Balachanther: சினிமா படம் இயக்குவது என்பது ஒரு மிகப்பெரிய கலை. அதை சரியாக செய்து, முதல் படத்திலேயே வெற்றியும் பெற்று விட்டால் அந்த இயக்குனர்கள் குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்ட இயக்குனர்களாக மாறிவிடுவார்கள். ஆனால் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சாதிக்காத ஒரு சாதனையை செய்துவிட்டு அதன் பின்னர் படம் இயக்காத இயக்குனர் ஒருவரும் இருக்கிறார்.

ஒரே படத்தில் காதல், கலை, நகைச்சுவை, இசை, சென்டிமென்ட் என மொத்தத்தையும் இறக்கி அது மிகப்பெரிய அளவில் ஹிட்டும் அடித்திருக்கிறது இந்த இயக்குனருக்கு. இன்றுவரை தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அதன் பின்னர் தன்னை அதே பாதையில் நிலை நிறுத்திக் கொள்ளவில்லை.

Also Read:ஒரே கிஸ்ஸுக்கு வச்சி செய்த கமல்.. நடிகை எவ்வளவோ கெஞ்சியும் கேட்கல

1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் என்னும் திரைப்படத்தை இயக்கிய கங்கை அமரன் தான் அந்த இயக்குனர். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படமாகும். பாகுபலி விட பல மடங்கு வரவேற்பையும், வசூலையும் குவித்திருக்கிறது கரகாட்டக்காரன் படம். கங்கை அமரனுக்கும் இந்த படம் மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா என முன்னணி நடிகர்களை வைத்து கங்கை அமரன் இயக்கிய இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 50 லட்சம் ஆகும். படத்தின் வருமானமும் பத்து மடங்கு லாபத்தை கொடுத்தது. அதாவது கரகாட்டக்காரன் படத்தின் மொத்த வசூல் அந்த காலத்திலேயே ஐந்து கோடியாகும்.

Also Read:ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு பெண் வேடத்தில் நடித்த 5 நடிகர்கள்.. ஜெமினியை காதலிக்க தூண்டிய சண்முகி

இப்படி ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அதன் பிறகு படங்கள் இயக்கவே இல்லை. பல சினிமா அரசியல் காரணங்கள் தான் இவரை படம் இயக்காமல் பண்ணியதாக சொல்லப்படுகிறது. ஒரு வேலை இவர் தொடர்ந்து படம் இயக்கிக் கொண்டிருந்தால் அப்போதைய முன்னணி இயக்குனர்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவுக்கே போட்டியாக மாறி இருப்பார்.

ஒரு படம் இயக்கினாலும் அந்தப் படத்தை 100 வருடங்களுக்கு மக்கள் பேசும் அளவுக்கு செய்து இருக்கிறார் கங்கை அமரன். இயக்குனராக மட்டுமல்ல இசையமைப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் இவருக்கு பெயரும், புகழும் அதற்கு சமமாக கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

Also Read:சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

Trending News