வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

அஜித்தை வைத்து படம் பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்ல.. விஜய்காந்த்தினால் மட்டுமே இது சாத்தியமாச்சு

பொதுவாக சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என ஆசைப்படும் அனைவரின் ஒரே கனவு பெரிய ஹீரோவை வைத்து ஒரு படம் பண்ணி மிகப்பெரிய அளவில் சாதித்து விட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். சிலருக்கு அந்த வாய்ப்பு உடனே கிடைத்துவிடும். சிலருக்கு பல வருடங்கள் போராடி அதன் பின்னர் தான் பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் . அதுவும் முதல் படமே ஹிட் அடிப்பது என்பதெல்லாம் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் படம் வெற்றியடைந்து விட்டால் அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்த படம் வெற்றி அடைந்து விட்டால் அந்த இயக்குனர்களின் சினிமா வாழ்க்கையே உச்சத்திற்கு சென்று விடும் என்று சொல்லுவார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் முதல் படம் ஹிட் படமாக இருந்தும், அந்த இயக்குனரை கண்டுகொள்ளகூட ஆளில்லாமல் போவதும் தமிழ் சினிமாவில் நடக்கத்தான் செய்கிறது.

Also Read: விஜய், அஜித் இல்லாத சிறந்த 10 நடிகர்களின் லிஸ்ட்.. வசூல் பண்ணா மட்டும் பத்தாது, பெர்பார்மன்ஸ் இல்ல

வாலி மற்றும் குஷி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். வாலி படத்தின் போது உதவி இயக்குனராக பணியாற்றியதால் இவருக்கு நடிகர் அஜித்துடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் அவரை முதல் படத்திலேயே இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுக்கு முதல் படமே நடிகர் அஜித்துடன் அமைந்தது. அதுவும் சாதாரண வெற்றி படம் இல்லை. அஜித்தின் சினிமா வாழ்க்கையே மாற்றிப் போட்ட திரைப்படம். 2001 ஆம் ஆண்டு வெளியான தீனா தான் அந்த திரைப்படம். இந்த படம் மூலமாக தான் அஜித்துக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. அவரை ஆக்சன் ஹீரோவாகவும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

Also Read: அஜித் இயக்குனரை டீலில் விட்ட கமல்.. நம்ப வைத்து கழுத்தறுத்த கொடுமை

இந்தப் படத்தில் வெற்றியின் மூலம் தெலுங்கில் கூட ரீமேக் ஆனது. மேலும் மாநில விருதும் கிடைத்தது. ஆனால் தீனா திரைப்படத்தின் மூலம் ஏ ஆர் முருகதாஸ் ஒரு இயக்குனராக ஏற்றுக்கொள்ளப்பட்டாரே தவிர அவருக்கு வேறு எந்த மரியாதையும், பாராட்டுக்களும் கிடைக்கவில்லை. படத்தின் வெற்றிக்கான மொத்த மரியாதையும், பாராட்டுக்களும் நடிகர் அஜித்துக்கு மட்டுமே கிடைத்தது.

முருகதாஸுக்கு மிகப்பெரிய அடையாளமும், மரியாதையும் கேப்டன் விஜயகாந்தின் ரமணா திரைப்படத்தை இயக்கியதன் மூலமே கிடைத்தது. ரமணா திரைப்படத்திற்கு பிறகு தான் அவருடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கொடுக்கப்பட்டது. இன்றைய காலகட்டங்களில் வெற்றி இயக்குனர்களை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், எவர்கிரீன் ஹிட் படமாக பார்க்கப்படும் தீனா படத்தை இயக்கிய முருகதாஸை அப்போது யாரும் கொண்டாடாதது ஆச்சரியமாகவே இருக்கிறது.

Also Read: அஜித்துக்கு தீனா படம் எப்படியோ அப்படித்தான் சிம்புவுக்கும் பத்து தல.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர்

- Advertisement -spot_img

Trending News