வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆழ்மனதில் வேரூன்றிய ஜாதி, அடிச்சா திருப்பி அடிக்க மாட்டாங்க.. பா ரஞ்சித்தை போல மாறி வரும் இயக்குனர்

Director Pa Ranjith: பொழுதுபோக்கு அம்சமாக இருந்த சினிமா இப்போது வியாபார மயமாக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளுக்கும் வித்திடுகிறது. அப்படித்தான் இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய படங்களில் மட்டுமல்லாமல் பொது மேடைகளில் கூட ஜாதி பற்றிய தன்னுடைய கருத்தை ஆவேசமாக முன்வைத்து வருகிறார்.

இது பல்வேறு விதமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இவரை போலவே தற்போது இயக்குனர் மாரி செல்வராஜூம் மாறிக்கொண்டிருக்கிறார். அதற்கு மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சே உதாரணம். தேவர் மகன் படத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அவர் பேசிய பேச்சு தான் இப்போது கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.

Also read: மாமன்னனில் வடிவேலு, உதயநிதி ரத்த சொந்தமா? இணையத்தில் கசிந்த மொத்த கதை

அது மட்டுமின்றி யாரை அடிச்சா திருப்பி அடிக்க மாட்டாங்களோ அவங்க கிட்ட தான் நம்ம அதிகாரத்தை காட்டுவோம். அதுதான் ஜாதி என்று அவர் பேசி இருப்பது பல விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது. இதை சினிமா விமர்சகர்கள் உட்பட ரசிகர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மேலும் இவருடைய கருத்துக்களை பார்க்கும் பொழுது ஆழ்மனதில் இருக்கும் ஜாதி வெறி அப்பட்டமாக தெரிவதாகவும் சில கருத்துக்கள் சோசியல் மீடியாவை வலம் வந்து கொண்டிருக்கிறது. இதை அவருடைய படத்தில் நடித்த நடிகர்கள் கூட வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதிலும் ஏதோ ஒரு கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு அதை படங்களில் காட்டுவது எவ்விதத்தில் நியாயமாகும்.

Also read: மேடையில் அவ்வளவு பேசிட்டு கமலுக்காக காத்துக் கிடந்த மாரி செல்வராஜ்.. மாமன்னன் ஆண்டவர் விமர்சனம்

மேல் வர்க்கம், கீழ் வர்க்கம் என்ற வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் இவர் தான் வன்முறையை அதிகபட்சமாக கையில் எடுக்கிறார். சாதிய அரசியல் என்று கூறும் இவர் சினிமாவிற்குள் அதை ஆழமாக விதைப்பது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும் தன் படத்தை இதை வைத்தே அவர் வெற்றி பெற செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

அந்த வகையில் மாமன்னன் படத்தின் ஒரு ப்ரமோஷன் ஆக நினைத்து அவர் இந்த ஜாதியை கையில் எடுத்திருந்தாலும் தற்போது கிளம்பி வரும் எதிர்ப்பலைகள் அதற்கு பின்னடைவாக தான் இருக்கிறது. அந்த வகையில் மாமன்னன் எந்த மாதிரியான ஒரு கருத்தை சொல்கிறது என்றும் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதும் இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

Also read: பாலாவை தூக்கி சாப்பிடும் மண்ட கோளாறு பிடிச்ச இயக்குனர்.. தப்பை மறைக்க சாதியை இழுத்த கேவலம்

Trending News