திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாய்ப்புக்காக செண்டிமெண்டாக உருட்டும் இயக்குனர்.. செத்தால் லோகேஷ் படத்துல தான் சாவாராம்

Director Lokesh Kanagaraj: ஷார்ட் பிலிம் மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இவரின் படத்தில் வாய்ப்பு பெற செண்டிமெண்டாக உருட்டி வரும் இயக்குனரை பற்றி இங்கு காணலாம்.

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் மாபெரும் இயக்குனர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இவர் இயக்கும் படங்கள் வெற்றி பெற்ற வருகிறது. இந்நிலையில் இவர் மேற்கொண்ட கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

Also Read: தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 5 இசையமைப்பாளர்கள்.. இசையால் அடிமையாக்கிய யுவன்

இதன் வெற்றிக்கு பிறகு இவர் மேற்கொள்ளும் படங்களில் லியோவும் ஒன்று. விஜய்யை வைத்து பார்த்து பார்த்து இயக்கும் இப்படத்தில் அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அவ்வாறு இந்திய நடிகர்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

மேலும் இவர் படங்களில் நடிக்க பெரிய நடிகர்கள் அனைவரும் ஆசைப்படுகிறார்கள். அதே மாதிரி சின்ன நடிகர்களும் ஆசைப்பட்டு வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஹிந்தியில் முன்னணி இயக்குனரான அனுராக் கஷ்யப் இவர் படத்தில் சிறு வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read: ஆண்டவர் என கமலுக்கு பெயர் வர இதுதான் காரணம்.. உலக நாயகனிடம் முட்டி மோதி முக்குடைந்த சினிமா

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.மேலும் லோகேஷ் கனகராஜ் படத்தில் இறக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறாராம். ஏனென்றால் இவர் படத்தில் ஐந்து நிமிட காட்சி ஒரு நடிகர் இறப்பது போல நடித்தால் அவர் பெரிய நடிகராக மாறிவிடுவாராம்.

அந்த அளவிற்கு இவர் கதாபாத்திரத்தை அமைத்துக் கொடுப்பதில் வல்லவர் என கூறி பெருமைப்பட்டு வருகிறார். இதனால் எனக்கு இவர் படத்தில் சாகும் கதாபாத்திரத்தில் நடித்து சாக வேண்டும் என ஆசை உள்ளதாகவும், மேலும் இவர் படங்கள் மீது தான் வெறித்தனமாக இருப்பதாகவும் கூறி வருகிறார் அனுராக். இந்த அளவிற்கு ஒரு பாலிவுட் இயக்குனர் புகழ்ந்து பேசும் நிலைக்கு லோகேஷ் கனகராஜ் இன் வளர்ச்சி இருந்து வருகிறது.

Also Read: விஜய்யின் பின்னால் இருக்கும் பெரிய அரசியல் புள்ளி?.. ஆடிப்போன மக்கள் இயக்க நிர்வாகிகள்

Trending News