திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதி வைத்தெல்லாம் என்னால் படம் பண்ண முடியாது.. கொந்தளித்த இயக்குனர்

Vijay Sethupathi: தமிழ் சினிமா உலகில் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கும் இவர், இந்தியில் ஹீரோவாக நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தவமாய் தவம் கிடக்கும் அளவிற்கு அவர் வெற்றி கொடி நாட்டியிருக்கிறார். ஆனால் பிரபல இயக்குனர் ஒருவரிடம் பத்திரிகையாளர்கள் நீங்கள் விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணுவீர்களா என்று கேட்ட கேள்விக்கு, அவருடன் நான் படம் பண்ண வாய்ப்பே இல்லை, அது நடக்கவும் நடக்காது என்று பதில் அளித்து இருக்கிறார்.

Also Read:சின்ன கல்லு பெத்த லாபம் அடிக்கும் விஜய் சேதுபதி.. வெறும் 20 நாட்களுக்கு இவ்வளவு கோடிகளா!

தமிழில் பொற்காலம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற உணர்வுபூர்வமான படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் இயக்குனர் சேரன். இவர் சமீபத்திய விழா ஒன்றில் பங்கெடுத்துக் கொண்ட பொழுது பத்திரிகையாளர்கள் இவரிடம் நீங்கள் விஜய் சேதுபதியுடன் படம் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சேரன் ரொம்பவும் காட்டமாக பதில் சொல்லி இருக்கிறார்.

விஜய் சேதுபதியை வைத்து நான் படம் பண்ணுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவருடைய லெவல் வேறு மாதிரி இருக்கிறது. அவருடைய கால்ஷீட் எல்லாம் இன்னும் பத்து வருடத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் அவருக்கும் எனக்கும் செட்டாகாது. அதனால் அவருடன் நான் படம் பண்ண மாட்டேன் என்று பத்திரிகையாளர்களிடம் ரொம்பவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார் சேரன்.

Also Read:முத்தையா போனதால் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதி.. உறுதியான வித்தியாசமான டைட்டில்

மாணவர்களுக்கான விழா ஒன்றில் கலந்து கொண்ட சேரனிடம் சூப்பர்ஸ்டார் சர்ச்சை பற்றி கேள்வி கேட்ட பொழுது, அவர் ரொம்பவே கோபப்பட்டு, நீங்கள் தான் இது போன்ற விஷயங்களை பேசி பெரிதாக்குகிறீர்கள். எந்த நடிகர் பெரியவர் என்று ரசிகர்கள் சண்டையிட்டால், நீங்களே அது தவறு என்று அவர்களிடம் சொல்லி விடுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் எங்களைப் போன்ற ஆட்களிடம் கேட்கிறீர்கள் என்று காரசாரமாக பதில் சொல்லி இருக்கிறார்.

இயக்குனர் சேரனை பொறுத்த வரைக்கும் ரொம்பவும் யதார்த்தமாக படம் எடுக்கக்கூடிய இயக்குனர். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வந்த இவர் அதன் பின்னர் குடும்பப் பிரச்சினை காரணமாக எந்த படங்களும் எடுக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவர் இயக்கிய திருமணம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

Also Read:கெஸ்ட் ரோலில் பல கோடிகள் சம்பளம் வாங்கிய 5 பேர்.. கரும்பு தின்ன கூலி வாங்கிய விஜய் சேதுபதி

Trending News