சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள். ஒரு கட்டத்திற்கு வந்த உடனேயே போட்டி பொறாமை என இருக்கும் இந்த சினிமா உலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேல் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
இவ்வளவு ஏன், ரஜினியை தனியாக படம் செய்யச் சொல்லி தைரியம் கொடுத்ததே கமலஹாசன் தான் என ரஜினியே பல மேடைகளில் கமல்ஹாசனைப் பற்றி பெருமையாக பேசியுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் ரஜினியை விட கமல்ஹாசனே அதிகம் பிரபலமான நடிகராக இருந்தார்.
அதன் பிறகு தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் தமிழ் ரசிகர்களின் மனதை பிடித்து தற்போது தமிழ் சினிமாவின் ராஜாவாக ஆட்சி செய்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினி மற்றும் கமல் இருவருமே ஆரம்ப காலகட்டங்களில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இவர்கள் இருவருக்குமே குரு என்றால் அது கே பாலச்சந்தர் தான். அப்படி ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த படமொன்றை பாலச்சந்தர் இயக்கிய கொண்டிருந்த நேரம் அது.
அந்த கால கட்டங்களில் ரஜினிக்கு புகை பிடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. படப்பிடிப்பில் சின்ன கேப் கிடைத்தாலும் புகைப்பிடித்து விடுவார். அப்படி கமலஹாசனுக்கு காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது ரஜினிக்கு காட்சி இல்லை என சொல்லி வெளியே சென்று தம்மடித்துக் கொண்டிருந்தாராம்.
பிறகு வந்தவரை கே பாலச்சந்தர் கமலஹாசன் முன்னாடியே, ரஜினியை திட்டி விட்டாராம். மேலும் போய் கமல் நடிப்பதை பார், அப்போதுதான் நடிப்பு என்றால் என்ன என்பது உனக்கு புரியும் எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தாராம்.