வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

திருமதி நயன்தாரா, எந்த கடவுளிடம் நீங்கள் பதில் சொல்வீர்கள்.. இயக்குனரின் கடும் தாக்கு!

Nayanthara: நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு தனுஷ் எப்போது பதில் சொல்வார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனைக்கு இன்னொரு இயக்குனர் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்ற போக்கில் இருக்கிறது இந்த அறிக்கை. நானும் ரவுடிதான் சம்பந்தப்பட்ட மூணு செகண்ட் வீடியோவை டாக்குமெண்டரியில் உபயோகித்திருக்கிறார்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

இந்த வீடியோவை 24 மணி நேரத்தில் நீக்காவிட்டால் பத்து கோடி அபராதம் தர வேண்டும் என தனுஷ் தரப்பு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு இந்த பிரச்சனை குறித்து மட்டும் இல்லாமல் தனுஷின் கேரக்டரையே விமர்சனம் செய்திருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.

தற்போது இதற்கு பதிலடி கொடுத்திருப்பவர் இயக்குனர் எஸ் எஸ் குமரன். அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கு முதலில் LIC என்று பெயர் வைத்த போது அந்த டைட்டிலுக்காக போராடியவர்.

இயக்குனரின் கடும் தாக்கு!

இப்படி ஒரு நேரத்தில் தும்மினால் தான் கரெக்டா இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இவர். இவர் எழுதி இருக்கும் அறிக்கையில், திருமதி நயன்தாரா அவர்களுக்கு வணக்கம். மூன்று வினாடி காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு திரு தனுஷ் அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்ததற்கு வெகுண்டு எழுந்த நீங்கள் கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் திரு விக்னேஷ் சிவன் என் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.

என் கதைக்கும் அந்த தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் அந்த தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத்தன்மையுடன் அதே தலைப்பை தன் படத்திற்கு திரு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால் உன்னால் என்ன பண்ண முடியும் என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும் அதற்கு எந்த கடவுள் மன்றத்தில் திரு விக்னேஷ் சிவனை பதில் சொல்ல சொல்வீர்கள்.

உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள் எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதிசதிகாரத்தோடு நடந்து கொண்டு என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும் என்று ஏகத்துக்கும் எழுதிய குமரன் இறுதியில், நீங்கள் இங்கு எதையும் இலவசமாக செய்யவில்லை எங்கள் படைப்புகளை மட்டும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்புலகத்திற்கு மிக மோசமான வழிகாட்டியாக நீங்களும் உங்க கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க என முடித்திருக்கிறார்.

Nayanthara
Nayanthara

Trending News