வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை அறைந்த இயக்குனர்.. ரகசியத்தை வெளியில் சொன்ன வில்லன்

Thalapathy Vijay: தளபதி விஜய் இன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சினிமா பிரபலங்களே சொல்லும் அளவிற்கு அவருடைய வளர்ச்சி பிரம்மாண்டமானதாக மாறி இருக்கிறது. மேலும் சமீப காலமாக அரசியல் பிரபலங்களின் பார்வையும் விஜய்யின் நடவடிக்கைகளை சுற்றித்தான் இருக்கிறது.

ஆனால் விஜய் இந்த நிலையை அவ்வளவு சீக்கிரமாக அடைந்து விடவில்லை. ஒரு இயக்குனரின் மகனாக சினிமாவிற்குள் அவர் நுழைந்திருந்தாலும் பட வாய்ப்புக்காக பட்ட கஷ்டங்கள் அதிகம். ஆரம்ப நாட்களில் விஜய்யை வைத்து படம் பண்ண கூட இயக்குனர்கள் யாரும் தயாராக இல்லை. அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான் அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்கி தயாரித்துக் கொண்டிருந்தார்.

Also Read:விஜய்யின் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்த காமெடி நடிகர்.. இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை

சமீபத்திய பேட்டி ஒன்றில் வில்லன் நடிகர் பொன்னம்பலம், நடிகர் விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இப்போது விஜய் படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பவர்கள், நடிப்புக்காக அவரை அடிக்கவே பயப்படுவார்கள். அதற்கு காரணம் விஜய்யின் ரசிகர்கள் தான். அப்படி இருக்கும்போது ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து விஜய்யை அறைந்து இருக்கிறார்.

நடிகர் விஜய் மற்றும் கேப்டன் விஜயகாந்த் இணைந்து நடித்த திரைப்படம் தான் செந்தூரப்பாண்டி. இந்த படம் நடிக்கும் பொழுது விஜய்க்கு 19 வயது இருக்கும். இந்த படத்தை இயக்கி தயாரித்தது அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர். படத்திற்கு கதை எழுதியது அவருடைய அம்மா சோபா சந்திரசேகர். விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் அனைவரது முன்னிலையிலும் அடித்த இயக்குனரும் அவருடைய அப்பா தான்.

Also Read:கல்வி வளர்ச்சி நாளில் தரமான சம்பவத்தை செய்த விஜய்.. நூதன முறையில் அரசாங்கத்தை சாடிய செயல்

பொன்னம்பலம் இந்த சம்பவத்தை பற்றி பேசும்பொழுது, சந்திரசேகர் அவரை அடித்தது உண்மைதான். ஆனால் அதில் விஜய் கண்டிப்பாக ஒரு சூப்பர் ஸ்டார் ஆகி விட வேண்டும் என்ற அக்கறை தான் அதிகமாக இருந்தது. இன்று விஜய் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணமே அவருடைய அப்பா தான். விஜய்யை ஒரு முன்னணி ஹீரோவாக மாற்ற அவர் கடின உழைப்பை போட்டு இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார் பொன்னம்பலம்.

உண்மையில் விஜய் முதன் முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தன் அப்பாவிடம் சொல்லிய பொழுது எஸ் ஏ சந்திரசேகருக்கு அதில் விருப்பமே இல்லை. ஆனால் விஜய்யின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று அவருடைய ஆல்பங்களை தூக்கிக்கொண்டு சந்திரசேகர் பல இயக்குனர்களிடமும் சென்று இருக்கிறார். மேலும் விஜய்க்காக பல படங்களை இயக்கி, தயாரித்து இருக்கிறார்.

Also Read:விஜய் அரசியலுக்குள் நுழைவது இவரை எதிர்க்கத்தான்.. பல வருடங்கள் தொடரும் பகை

Trending News