சந்தானம் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற அளவுக்கு ஹீரோவாக இன்னும் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இருந்தாலும் ஒரு கமர்சியல் ஹீரோவாக சாதித்தே தீருவேன் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சந்தானம் நடிப்பில் ரிலீஸுக்காக ஒரு டஜன் படங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. மேலும் படப்பிடிப்பிலும் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. ஹீரோவாக பெரிய வெற்றி கொடுக்காத நடிகருக்கு கைவசம் இவ்வளவு படங்கள் இருப்பது ஆச்சரியம்தான் என்கிறது சினிமா வட்டாரம்.
சந்தானம் படத்திற்கு ஓப்பனிங் இருக்கும் அளவுக்கு வசூல் இல்லை என்பதே ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு தரமான என்டர்டைன்மென்ட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் சந்தானம். அப்படி சந்தானத்தின் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டிக்கிலோனா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
என்னதான் சந்தானத்திற்கு ஆரம்பத்தில் சிம்பு தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து அவரை ஒரு காமெடியனாக உருவாக்கினாலும் சந்தானம் இவ்வளவு பெரிய காமெடி நடிகராக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இயக்குனர் எம் ராஜேஷ் தான்.
எம் ராஜேஷ் மற்றும் சந்தானம் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களிலுமே காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பின. ராஜேஷ் கடந்த சில வருடங்களாக வெற்றிப்படங்கள் கொடுக்காமல் தடுமாறி வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சந்தானம் எப்போது ஹீரோவாக நடிக்கத் தொடங்கினாரோ அப்போதிலிருந்தே ராஜேஷ் சரியத் தொடங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் சந்தானத்தை சந்தித்து ஒரு கதைசொல்லி வாய்ப்புக்காக வெயிட் செய்து கொண்டிருக்கிறாராம் ராஜேஷ். என்னதான் இருந்தாலும் தன்னை தூக்கிவிட்டவராச்சே என சந்தானம் வாய்ப்பு கொடுத்து விரைவில் இவர்களது படம் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.