திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டாரு.. மாவீரன் படத்தால் நொந்து போன இயக்குனர்

Maaveeran: சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் படம் நாளை ஆரவாரமாக வெளியாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே இப்படத்தின் பிரமோஷன் பட்டையை கிளப்பி வரும் நிலையில் படம் வெளியாவதிலும் திடீர் சிக்கல் ஏற்பட்டது.

அதாவது மாவீரன் ட்ரைலரில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சியில் காண்பிக்கப்பட்ட கொடி இந்திய ஜனநாயக கட்சி கொடியின் நிறம் போல் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து படத்தை வெளியிடக் கூடாது என கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

Also read: சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட சிவகார்த்திகேயன்.. சுஹாசினி போல் செய்த தவறு

அந்த விசாரணையில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் படம் வெளியாகும் போது கொடியின் நிறம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து படம் வெளியாவதில் இருந்தா சிக்கல் தீர்ந்ததால் பட குழு கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர்.

ஆனால் பெப்சி அமைப்பின் தலைவரும், இயக்குனருமான ஆர் கே செல்வமணி திடீரென இயக்குனருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அப்போது அவர் சம்பந்தப்பட்ட அந்த கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பற்றி கூறியிருக்கிறார். அவரால் தான் நம் தமிழ் சினிமா பல வளர்ச்சிகளை கண்டது.

Also read: நிஜ அரசியல்வாதிகளுக்கு டஃப் கொடுத்த 5 ரீல் நடிகர்கள்.. எப்போதும் ஃபேவரிட் ஆக இருக்கும் அமாவாசை

பல பேருக்கு மருத்துவ உதவி உட்பட பல விஷயங்களை அவர் செய்து வருகிறார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கும் மேல் அவரால் பிழைத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் இப்படி செய்யலாமா என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன இயக்குனர் இது எதார்த்தமாக நடந்தது தான் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இப்படியாக சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டேங்கிறாரு என்ற கதையாக கோர்ட்டே இந்த பிரச்சனையை விட்டாலும், பிரபலங்கள் இதை தவறாக பார்க்கிறார்களே என பட குழு நொந்து போய் இருக்கிறது. இருந்தாலும் படம் வெளியான பிறகு தங்கள் பக்க நியாயம் புரியும் என அவர்கள் அமைதி காத்து வருகின்றனர். அந்த வகையில் நாளை வெளியாக இருக்கும் மாவீரன் இன்னும் என்னென்ன சர்ச்சைகளை சந்திக்க போகிறதோ தெரியவில்லை.

Also read: சிவகார்த்திகேயனுக்காக உதயநிதி போட்ட ட்வீட்.. மாவீரனுக்கு வந்த முதல் விமர்சனம்

Trending News