திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இயக்குனரின் கேரியரை குழி தோண்டி புதைத்த கௌதம் மேனன்.. உண்மையை உடைத்த பிரபலம்

Gautham Menon: இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்து வரும் கௌதம் மேனன் இப்போது நடிகராக ஒரு பக்கம் பல படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வர இருக்கும் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படம் இப்போது விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் கௌதம் மேனன் இயக்குனர் ஒருவரை பெரிய குழி தோண்டி பள்ளத்தில் தள்ளி விடப்பட்டதாக வலைப்பேச்சு அந்தணன் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Also Read : கௌதம் வாசுதேவ் மேனன் தலையில் டக்குன்னு எரிஞ்ச பல்பு .. வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

அதாவது 19 வயதிலேயே இயக்குனர் ஆகி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்துள்ளார் கார்த்திக் நரேன். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட அந்த படம் வெறும் 20 நாட்களில் மட்டுமே படமாக்கப்பட்டதாம். இத்தகைய திறமை உடைய கார்த்திக் நரேன் அதன்பிறகு பெரிய அளவில் எந்த இடம் கொடுக்காததற்கு காரணம் தமிழ் சினிமா செய்த சூழ்ச்சி தான்.

ஒரு வெற்றி கொடுத்தால் அவரை நிறைய பேர் சூழ்ந்து கொள்வார்கள். எதில் கையெழுத்து போடுகிறோம் என்பதை தெரிந்துதான் போட வேண்டும். அவரை வைத்து நிறைய பேர் பணம் பார்க்க ஆசைப்படுவார்கள். அப்படிதான் கார்த்திக் நரேன் சினிமா பிரபலங்கள் சிலரை நம்பி ஏமாந்து விட்டார்.

Also Read : தளபதி படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லாமல் எப்படி?. லியோவின் அதிரடியான அப்டேட்

அதிலும் கார்த்திக் நரேன் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்து பார்த்தாலே தெரியும், கௌதம் மேனன் அவரை ஏமாற்றி விட்டார் என்பது. மேலும் தனுஷின் மாறன் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. இப்போது நடிகர் அரவிந்த்சாமியை வைத்து நரகாசுரன் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இவ்வாறு திறமை இருந்தும் சூழ்ச்சியால் கேரியரை தொலைத்த நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள். இது சினிமாவில் மட்டும் என்று சொல்லிவிட முடியாது. தோல்வியை கொடுத்ததற்கு பின்பை விட, வெற்றி கொடுக்கும் போது நிதானமாகத்தான் அடுத்து செயல்பட வேண்டும். ஏனென்றால் நம் காலை வாரி விட பின்னால் நிறைய பேர் இருப்பார்கள் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.

Also Read : நான் அவ்வளவு திறமையான ஆள் கிடையாது.. லியோ படத்தை மறுத்ததற்கு விஷால் கூறிய மொக்க காரணம்

Trending News